Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

* பேட்மின்டன் கில்லி பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. இந்தி நடிகர் சோனு சூட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். `பயோபிக் எடுக்கவிருக்கும் நபருக்கு என வித்தியாசமான கதையும் முடிவும் நிச்சயம் வேண்டும். ஆனால், வெறும் 21 வயதான சிந்துவுக்கு பயோபிக் எடுப்பது செம சவால். சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பம்’ என சோனு சூட் சொல்ல, சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. சாம்பியன் ஸ்டோரி

இன்பாக்ஸ்

ஐ.சி.சி-யிடம் முறுக்கிக்கொண்டு நிற்கிறது பி.சி.சி.ஐ. `ஐ.சி.சி கொண்டுவந்துள்ள புதிய கொள்கைப்படி இந்தியாவுக்கு வழக்கமாக வரவேண்டிய 570 மில்லியன் டாலருக்குப் பதிலாக, 293 மில்லியன் டாலர் மட்டுமே தரப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் நஷ்டம். இதை பி.சி.சி.ஐ கடுமையாக எதிர்த்துவருகிறது. `ஐ.சி.சி-யின் ஒட்டுமொத்த வருமானத்தில் 70 சதவிகிதம் இந்தியாவிலிருந்துதான் செல்கிறது. ஆனால், பி.சி.சி.ஐ-க்கு நிதி குறைப்பா?’ என மோதல் எழுந்துள்ளது. இதையடுத்து, சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்தியா இன்னா... அவுட்டா? என்பதிலேயே குழப்பம். ஐ.சி.சி-யின் தூஸ்ரா

`` ‘2.0’ படத்தில் ஹீரோயின் ஏமிஜாக்சன். ஆனால், முதல் பார்ட்டில் நடித்த ஐஸ்வர்யா ராய் இல்லாமல் படம் எடுத்தால் எப்படி?’ எனப் பலரும் ஷங்கரிடம் லாஜிக்கலாக கேள்வி எழுப்ப, மனுஷன் ரொம்பவே கூலாகத் தீர்வுகண்டுவிட்டார். ‘2.0’ படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் போனில் பேசுவதுபோல் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரியாலிட்டிக்காக ஐஸ்வர்யா ராயின் க்ளோசப் காட்சிகளையும் பயன்படுத்தப்போகிறார்களாம். ஷங்கரிசம்

அழகிரி வீட்டில் தாலாட்டு கேட்கிறது... மகன் துரை தயாநிதி - அனுஷா தம்பதியினருக்கு அழகு மகன் பிறந்திருக்கிறான். பேரனுக்கு என்ன பெயர் வைப்பது எனத் தீவிர டிஸ்கஷனில் இருக்கிறார் அழகிரி தாத்தா. சூர்ய வம்சம்

இன்பாக்ஸ்

அழகிய நாகமாக `நாகினி', `நாகினி பார்ட் 2' என இரண்டிலும் கலக்கிக்கொண்டிருப்பவர் மௌனி ராய். பல ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் இவருக்கு, தற்போது பாலிவுட் வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது. நாகினியில் மௌனி ராயின் அசத்தலான நடிப்பைப் பார்த்த சல்மான்கான், தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் படத்தில், ஹீரோயின் ரோலுக்கு மெளனியை டிக் அடித்திருக்கிறார்.
எதிர்பாராத இந்த வாய்ப்பால் நெகிழ்ந்து, தன் நட்பு வட்டாரத்தில் சல்மான்கான் புகழாரம் பாடிக் கொண்டிருக்கிறார் மௌனிராய். மிஸ்யூ நாகினி

இன்பாக்ஸ்

*   ‘சாமி’ இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி ரெடி. முதல் பாகத்தில் நடித்த விக்ரம்தான் ஹீரோ. ஆனால், ஹீரோயின் த்ரிஷா இல்லை கீர்த்தி. அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார் சீயான். த்ரிஷா இல்லன்னா கீர்த்தி!