சமூகம்
தொடர்கள்
Published:Updated:

“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி

“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி
பிரீமியம் ஸ்டோரி
News
“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி

“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி

“உடல்நலம் இல்லாமல் இருக்கும் என் கணவரைச் சந்திக்க அனுமதிக்க வில்லை. அவருக்கு என்ன நோய் என்பதைக்கூட தெரிவிக்கவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து” எனக் கறுகிறார் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு. தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக மு. க. அழகிரி கோலோச்சியபோது, அவருடைய ஆசியுடன் மதுரையில் மிரட்டலாக வலம் வந்தவர் அட்டாக் பாண்டி. அழகிரியின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சென்ற பாண்டி, அப்படியே அரசியலிலும் வளர்ந்தார். மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவராக உயர்ந்தார்.

அந்தச் சமயத்தில், அழகிரியின் வலதுகரமாக விளங்கிய பொட்டு சுரேஷுக்கும் பாண்டிக்கும் மோதல் ஏற்பட்டது. அட்டாக் பாண்டி மீது பல வழக்குகள் பாய்ந்தன. இந்த நிலையில், பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டார்கள். மூன்று வருடங்கள் தலைமறைவாக இருந்த பாண்டி, பிறகு மும்பையில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டார். அதற்குப் பின்னும் பல வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. மற்ற வழக்குகளில் ஜாமீன் வாங்கிய பாண்டிக்கு, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.

“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி

இந்தச் சூழ்நிலையில் ‘என் கணவருக்கு உடல்நலமில்லை. அவரை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தயாளு மனு அளித்தார். அதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனையில் பாண்டி சேர்க்கப்பட்டார். ‘கணவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்து கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பினார் தயாளு. அதைத் தொடர்ந்து, பாண்டி கடந்த வாரம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில்தான், தயாளு இப்படி ஒரு அதிர்ச்சியைக் கிளப்பினார்.

தயாளுவைச் சந்தித்தோம். ‘‘சட்டப்படி எது நடக்கணுமோ, அது நடக்கட்டும். ஆனால், கைதி என்ற முறையில் அவருக்கான உரிமையும், அவர் மனைவி என்ற முறையில் எனக்கான உரிமையும் வழங்கப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருடைய உடல்நலம் நன்றாக இருந்தது. சில தி.மு.க தலைவர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் சொல்லுமாறு அவரை சித்ரவதை செய்துள்ளனர். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், அவரைக் கொலை செய்ய முடிவெடுத்துவிட்டார்கள்.

“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி

அவருக்குச் சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அந்த உணவால்தான் அவருக்கு வயிற்றுவலி வந்தது. அவரால் பேசக்கூட முடியாத அளவுக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது. ஆனால், முறையான மருத்துவச் சிகிச்சையை இதுவரை அளிக்கவில்லை. அதனால்தான், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு மனு செய்தேன். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த போதும், மனைவி என்ற முறையில் எனக்கோ, எங்கள் வக்கீலுக்கோ தகவல் சொல்லவில்லை. கவர்னருக்கும், முதல்வருக்கும் மனு அனுப்பிய பிறகுதான் இங்கு கொண்டுவந்தார்கள். அவரோடு பேசக்கூட போலீஸ் அனுமதிக்கவில்லை. அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்காமல், கைதிகளுக்கான வார்டில் வைத்துள்ளனர். அங்கு டாக்டர்களே செல்வதில்லை. அவருக்கு ஆபரேஷன் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அதை என்னிடம் தெரிவிக்க வில்லை. அவருக்கு என்ன நோய் என்பதையும் சொல்லவில்லை. சிகிச்சை என்ற பெயரில் அவரைக் கொல்லப் பார்க்கிறார்களோ எனச் சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.

பாண்டியின் வழக்கறிஞர் இளங்கோ, “தனக்குச் சிறைக்குள் ஆபத்து உள்ளது என்று சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத் தலைமை நீதிபதிக்கு ஒரு புகார் எழுதி, அதைச் சிறையிலுள்ள புகார் பெட்டியில் பாண்டி போட்டுள்ளார். ஆனால், அது நீதிபதிக்குப் போய்ச் சேரவில்லை. பாண்டியை நான் சந்தித்தபோது, ஜூ.வி-யிடம் தெரிவிக்குமாறு சில தகவல்களைச் சொன்னார். கைது செய்யப்பட்ட நேரத்தில், பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களையும் சேர்த்துச் சொல்லுமாறு போலீஸார் அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு மறுத்தபோது, சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அதைக் குறிப்பிட்டுப் பாண்டியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதனால், அவர் உயிர் தப்பியது.

“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்!” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி

பல வழிகளில் அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ‘என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், உளவுப்பிரிவின் முக்கிய அதிகாரியும், சிறைத்துறையும், காவல்துறையும்தான் காரணம். நான் கொல்லப்பட்டால் உடலை, கேரளா அல்லது டெல்லியில் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும். சந்தேக மரணம் என்பதால் உடலை எரிக்காமல் புதைக்கவேண்டும்’ என என்னிடம் சொன்னதுடன், அதை மனுவாகவும் எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தார் பாண்டி. இப்போது நடக்கிற சம்பவங்கள், அந்தச் சந்தேகத்தை உறுதி செய்வது போலவே உள்ளன. நாங்கள் நீதிமன்றத்தைத்தான் நம்பியிருக்கிறோம்” என்றார்.

அட்டாக் பாண்டி விவகாரத்தில் எல்லாமே மர்மமாக உள்ளன.

- செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்