சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

* ஷ்ரத்தா கபூரும், ஆலியா பட்டும்தான் பாலிவுட்டின்  ஹிட் ஹாட் ஹீரோயின்ஸ். ஷ்ரத்தா நடிப்பில் இந்த ஆண்டு மட்டுமே 3 படங்கள் வர, அடுத்த ஆண்டு பிரபாஸுடன் `சாஹோ’, சாய்னா நேவால் பயோபிக் என இரண்டு படங்களில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆலியா பட்டுக்கு 2019 வரை கால்ஷீட் ஃபுல். இருவருமே ஒரு படத்தில் நடிக்க 4-5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். கோடி லேடீஸ்!

இன்பாக்ஸ்

* தெருவில் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு கடந்துசெல்பவர் அல்ல சூர்யா. கடந்த வாரம் நள்ளிரவில் சூர்யாவை காரில் பார்த்த சில ரசிகர்கள் அவரை பைக்கில் அதிவேகமாகப் பின்தொடர, காரை ஓரமாக நிறுத்திவிட்டு ரசிகர்களிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.‘தயவுசெய்து பைக்கை வேகமா ஓட்டாதீங்க. என்மேல அன்பு வெச்சிருந் தீங்கன்னா நான் சொல்றதைக் கேளுங்க. உங்க வாழ்க்கையோட விளையாடாதீங்க’ என நட்போடு பேச, ரசிகர்கள் எல்லாம் ஹைஃபை சொல்லி விடை பெற்றிருக்கிறார்கள். சூப்பர் சூர்யா!

* சினிமாவாகிறது பி.டி.உஷாவின் வாழ்க்கை. ஜோதிகா, குஷ்பு, சரிதா நடிப்பில் வெளியான ‘ஜூன்-ஆர்’ படத்தை இயக்கிய ரேவதி வர்மா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. பி.டி. உஷாவாக நடிக்கும் ரேஸில் பிரியங்கா சோப்ரா முன்னணியில் இருக்கிறார்! வாழ்க்கைப்பாடம்!

இன்பாக்ஸ்

* ஒரு பாடலுக்காக மட்டுமே 1 மாதம் கால்ஷீட் கொடுத்து ஆடி முடித்திருக்கிறார் எமி ஜாக்ஸன். 2.0 படத்தில் ரோபோவாக எமியின் ஆட்டம் மட்டுமே 12 நாள்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாடல் படம் பிடிப்பதற்கு முன்பாக 10 நாள்கள் ரிகர்சல் செய்யப்பட்டிருக்கிறது. ‘‘ `ஐ’ படத்தில் ‘என்னோடு நீ இருந் தால்’ பாடலையும் இப்படித்தான் பல நாள்கள் ஷூட் செய்தோம். அதேபோல் இந்தப் பாடலும் 10 நாள் ஷூட்டைத் தாண்டியிருக்கிறது. இந்தப் பாடலைப் பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் தியேட்டருக்கு வரும்’’ என்கிறார் எமி. பேபிம்மா சொன்னா சரிதான்!

* தன் தந்தையும் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மகன் பாலகிருஷ்ணா. என்.டி.ஆர் அவதாரம் எடுக்க இருப்பவர் பாலகிருஷ்ணாவே. என்.டி.ஆர் தனது கடைசிகாலத்தில் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியுடன் இருந்த போர்ஷனை மட்டும் நீக்கிவிட்டு பயோபிக் எடுக்கத் திட்ட மிட்டிருக்கிறார்கள். வெட்டுவதில் வல்லவர்கள்!

இன்பாக்ஸ்

* ‘மாரி-2’விலும் அனிருத் இல்லை. ‘பவர் பாண்டி’, ‘விஐபி-2’ படங்களுக்கு ஷான் ரோல்டன் இசையைத் தேர்ந்தெடுத்த தனுஷ்  மாரி-2-வில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்திருக்கிறார்.  ஹீரோயின் சாய் பல்லவி, வில்லனாக டொவினோ தாமஸ், முக்கியமான கேரக்டரில் இயக்குநர் விஷ்ணு வர்தனின் தம்பி கிருஷ்ணா என காஸ்ட்டிங் களைகட்டுகிறது. வேற `மாரி’ எடுங்க பாய்ஸ்!

இன்பாக்ஸ்

* த்ரிஷாவுக்கு சினிமாவில் இது 18-வது ஆண்டு. தமிழில் `சதுரங்க வேட்டை -2’, `கர்ஜனை’, `மோகினி’, மலையாளத்தில் நிவின் பாலியுடன் `ஹே ஜூட்’ என  நான்கு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்க, விஜய்சேதுபதியுடன் `96’,  `பரமபதம்’என இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. ‘‘2017 எனக்கான வருஷமா இருக்கும்னு நினைச்சேன். ஆனால், 4 படங் களுமே ரிலீஸாகாமலிருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு” என வருத்தப்பட்டிருக்கிறார் த்ரிஷ். ரிலாக்ஸ் பேபி! 

* மலையாளத்தில்  ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் தமிழில் `நிமிர்’ ஆகவிருக்கிறது. பிரியதர்ஷன் இயக்க உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.இந்தப்படத்துக்கு சமுத்திரக்கனி வசனம் எழுதி நெகட்டிவ் ரோலிலும் நடிக்கிறார். உதயநிதியின் அப்பாவாக இயக்குநர் மகேந்திரன் நடிக்கிறார். கூட்டணி சினிமா