Published:Updated:

ராகிங் புகார்... 19 மாணவர்களை இடைநீக்கம் செய்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி!

ராகிங் புகார்... 19 மாணவர்களை இடைநீக்கம் செய்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி!
News

மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் மருத்துவர்களை மன உளைச்சல் ஏற்படும்படி ராகிங் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதிக்குள் புகுந்து முதலாம் ஆண்டு மாணவர்களைத் தங்கள் சீனியர்கள் ராகிங் செய்த வீடியோ, புகைப்படங்கள் மற்றும் தகவலை  இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மெயில் மூலமாக அனுப்பி புகார் அளித்துள்ளனர். மாணவரை ராகிங் செய்த புகாரில் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ராகிங் தடுப்பு (Anti Ragging) கமிட்டியின் முடிவை தொடர்ந்து மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது தொடர்பாக இன்று மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரியில் விசாரணை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஆகஸ்ட் 30-ம் தேதி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஆன்டி ராகிங் குழு தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்ற 19 மாணவர்களும் ராகிங்கில் ஈடுபட்டது சிசிடிவி காட்சியில் உறுதியானதால் 19 மாணவர்களும் ஓராண்டு மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்தும், 6 மாதத்துக்கு கல்லூரியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள் அறையில் தங்குவதோ, விடுதியில் சாப்பிடுவதோ கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் தொடர்பான அறிக்கை டெல்லியில் உள்ள தலைமை ஆன்டி-ராக்கிங் கமிட்டி, மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடல்ரீதியாகக் காயப்படுத்தியதாகப் புகார் வரவில்லை மனம் நோகும்படியான வார்த்தைகளாலும் செயல்களாலும் ராக்கிங் செய்துள்ளதாகவே புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதியில் ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் மூன்று உள்ளது. இன்னும் மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.