Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

சானியா மிர்சா, சிந்து வரிசையில் தற்போது இந்தியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருப்பவர் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால். ஹரியானாவைச் சேர்ந்த இவர், ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சீனாவை வென்று 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆசியக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர். இப்போது இவரது கவனமெல்லாம் அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றெடுப்பதில் மட்டுமே. `என்னதான் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தாலும், ஆண்கள் ஹாக்கி அணியோடு ஒப்பிடுகையில், மத்திய அரசு வேலை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது சோர்வடையச் செய்கிறது’ என்ற  மனக்குறை இவருக்கு. தங்கல், சக் தே இந்தியா படங்கள் பார்த்தா மட்டும் போதாது ஆபீஸர்ஸ்!

இன்பாக்ஸ்

மிழில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அப்செட்டில் இருக்கிறார் தெலுங்குதேசத்தின் தளபதி மகேஷ்பாபு. `சென்னை நான் பிறந்து வளர்ந்த ஊர். இங்க ஒரு ஹிட் கொடுத்தே ஆகணும்’ என  எல்லா இயக்குநர்களிடமும் பைலிங்குவல் ஸ்க்ரிப்ட் கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரின்ஸ் பாபு! போக்கிரி பார்ட் 2 பண்ணுங்கணா!

இன்பாக்ஸ்

மி ஜாக்ஸனை இனி தமிழில் பார்க்க முடியாது. 2.0 படத்துக்குப் பிறகு இந்தியில் வெளியான `குயின்' படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிப்பதாக இருந்தார் எமி. ஆனால், சூப்பர்கேர்ள் டிவி சீரியலில் நடிக்கவிருப்பதால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கமுடியாது என விலகியிருக்கிறார். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் நடிக்க, எமிக்குப் பதிலாக ஸ்வீடன் நடிகை எல்லி நடிக்கவிருக்கிறார். வி மிஸ் யூ எமி!

ஹீர் ஷா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடுத்த சென்சேஷன். பங்கேற்ற முதல் போட்டியிலேயே டபுள் செஞ்சுரி. 256 ரன், நாட் அவுட்.  இது அறிமுக முதல்தரப் போட்டியில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அந்த 18 வயது இளைஞனின் ஓட்டம் அதோடு நிற்கவில்லை. மூன்றாவது போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம். நான்காவது போட்டியில் முச்சதம். முறையான உள்கட்டமைப்பு இல்லாத இடத்திலிருந்து சத்தமில்லாமல் கிளம்பியுள்ளது ஓர் இளம்புயல். விரைவில், ஒரு டி-20 லீக்கில் பஹீர் ஷா கோடிகளில் ஏலம் போகலாம்! சூப்பரப்பு!

இன்பாக்ஸ்

தொல் திருமாவளவன் விரைவில் டாக்டர் திருமாவளவன். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்துவருகிறார் திருமா. நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம்செய்யப்பட்டது குறித்த ஆய்வை மேற்கொண்டுவருகிறார். ஆய்வை முடித்து, வரும் ஜனவரி மாதம் டாக்டர் பட்டம் பெறுகிறார் திருமாவளவன். வாழ்த்துகள் முனைவரே!

 ரஞ்சி டிராபியில் 500 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது மும்பை அணி. இதைக் கொண்டாடும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் சமீபத்தில் ஒரு விழா நடந்தது. இதில், சச்சின், கவாஸ்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று, மும்பை அணியின் புகழ் பாடினர்.  1934-ம் ஆண்டிலிருந்து நடந்துவரும் ரஞ்சி டிராபி தொடரின், சக்சஸ்ஃபுல் டீம் மும்பைதான். இதுவரை 46 முறை ஃபைனலுக்கு முன்னேறி 41 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா என ஒவ்வொரு தலைமுறைக்கும்  மட்டுமல்லாது ஒவ்வொரு சீசனுக்கும் நட்சத்திர வீரர்களை இறக்கிக்கொண்டிருக்கிறது மும்பை. சலாம் மும்பை!

இன்பாக்ஸ்

`தென்மேற்குப் பருவக்காற்று’, `பரதேசி’, `ஜோக்கர்’ எனத் தான் ஒளிப்பதிவு செய்யும் படங்களிலேயே வெரைட்டி காட்டி அசத்தும் ஒளிப்பதிவாளர் செழியன், இயக்குநர் அவதாரமெடுத்திருக்கிறார். `To-Let’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.   இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் இந்தியப் படங்கள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. `சென்னையில் எல்லோரும் அனுபவித்த ஒரு வலிதான் கதை!’ எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்-ஒளிப்பதிவாளர் செழியன். விருது பார்சேல்.

செ
ன்ற வாரம் விமானச் சேவை நிறுவனங்களுக்கு துக்க வாரம். இண்டிகோ ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு பிரச்னை. அதில் வாடிக்கையாளரின் கை நீள, பதிலுக்கு ஊழியரும் அடித்துவிட்டார். இதை சீனியர் ஊழியர் படம்பிடிக்க, “சமாதானம் பண்ண வேண்டிய நீ வீடியோ எடுத்துட்டிருந்தியா?” என அவரை 15 நாள் சஸ்பெண்ட் செய்தது இண்டிகோ. 15 நாள்கள் கழித்தும் பணியில் சேர அனுமதிக்காததால் அந்த வீடியோவை நெட்டில் ரிலீஸ் செய்துவிட்டார் ஊழியர். இண்டிகோவுக்கு இதனால் சமூக வலைதளத்தில் பெரிய டேமேஜ். அடுத்த நாள் ஏர் இந்தியா “unBEATable service’, ``நன்றி சொல்லத்தான் நாங்கள் கைகளை உயர்த்துவோம்” என்றெல்லாம் கவுன்ட்டர் கொடுக்க, வைரல் ஆனது ஏர் இந்தியா. அடிச்சிக்காதீங்கப்பா.