மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஏப்ரல் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

மேஷம்: பிரச்னைகளைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடலாம். 

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகம்: எந்த விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.

`தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருப்பது நல்லது.

ராசி பலன்கள்

ரிஷபம்: உங்களின் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உடற்சோர்வு நீங்கும்; உற்சாகம் பிறக்கும். ஓரளவு பணம் வரும். வீடு, வாகன வசதிகள் பெருகும். வீண்செலவு, காரிய தாமதம் ஏற்படும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். உறவினர்களிடம் பழகும்போது கவனமாகப் பழகுங்கள்.

வியாபாரம்: கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகம்: விமர்சனங்கள் தலைதூக்கும்.

 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். அதிகார மிக்க பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகம்: உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

 அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.

ராசி பலன்கள்

கடகம்: உயரதிகாரிகளின் நட்பு கிட்டும். நீண்டநாள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சோம்பல் நீங்கி, உற்சாகம் உண்டாகும். உறவினர்களுடன் கவனமாகப் பழகுங்கள்.

வியாபாரம்: வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

உத்தியோகம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் விலகும். செலவுகள் அதிகமாகும்.

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகம்: மூத்த அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். உங்கள் வேலைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

 சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

ராசி பலன்கள்

கன்னி: சொந்தபந்தங்களின் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக் கும். மகனுக்கு நல்ல இடத்தில் வேலை அமையும். புது சொத்து சேரும். அரசாங்க காரியங்கள் சுலபமாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரம்: முக்கிய சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

உத்தியோகம்: அதிகாரிகளின் போக்கை அனுசரித்துச் செல்வது நல்லது.

 எதிர்பார்த்தவற்றில் சில நிறைவேறும்.

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்கும். வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். ஆனால், எதிர்பாராத செலவினங்களால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: கணிசமாக லாபம் கூடும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.

உத்தியோகம்: பதவி உயர்வு, இடமாற்றம் இருக்கும்.

 திடீர்த் திருப்பங்கள் உண்டாகும்.

ராசி பலன்கள்

விருச்சிகம்: செல்வாக்கு கூடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். நண்பர்களுடன் விவாதம் வேண்டாம். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். பொது இடங்களில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

வியாபாரம்: நஷ்டங்களை ஈடுகட்டி சரிசெய்வீர்கள்.

உத்தியோகம்: புதிய சலுகைகள் கிடைக்கும்.

 எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலமிது.

தனுசு: சொந்தபந்தங்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். மகனின் உயர்கல்விக்காக முக்கியப் பிரமுகர்களின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.

ராசி பலன்கள்வியாபாரம்: வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகம்: சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

 நீண்ட நாள் கனவு நனவாகும்.

ராசி பலன்கள்

மகரம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். பழைய சொத்து ஒன்றை விற்று உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீண் சந்தேகங்கள் வரக்கூடும். பேச்சில் நிதானம் தேவை.

வியாபாரம்: சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகம்: புதிய சலுகைகள் கிடைக்கும்.

பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கும்பம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர் பாராத பணவரவு உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.

உத்தியோகம்: கௌரவப் பொறுப்புகள் தேடிவரும்.

வெளிச்சமும் வெற்றியும் உங்களை நோக்கி வரும்.  

ராசி பலன்கள்

மீனம்: உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் வந்தாலும், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். இங்கிதமாகப் பேசி பல காரியங்களைச் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

வியாபாரம்: ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகம்: விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள்.

மலரும் நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்திருப்பீர்கள்.