Published:Updated:

`மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!’ நெல்லை பல்கலைக்கழகப் பேராசிரியரை சிக்கவைத்த `சிடி’

`மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!’ நெல்லை பல்கலைக்கழகப் பேராசிரியரை சிக்கவைத்த `சிடி’
News

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்திருப்பது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளிலும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கான வசதிகள் உள்ளன. அவற்றில் மாணவர்களைவிடவும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கெனவே இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரு பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கோவிந்தராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிஹெச்.டி ஆய்வு மேற்கொள்ளும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக, கடந்த 10 நாள்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்களுக்கு ‘மாணவர் சங்கம்’ என்கிற பெயரில் புகார் மனுக்களும் அதற்கு ஆதாரமான சி.டி-யும் வந்துள்ளன.

அவற்றைப் படித்துப் பார்த்தபோது, அதில் ஆராய்ச்சி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அத்துடன், அந்த ஆடியோவில் பேசிய பேராசிரியர் ஆபாசமாகவும் அருவருக்கத்தகுந்த வகையிலும் பலமுறை பேசியதற்கான ஆதாரம் இருந்துள்ளது. அதனால் இந்த விவகாரம் குறித்துத் தெரியவந்ததும், பல்கலைக்கழகத்தின் 4 பெண் பேராசிரியர்கள், 3 ஆண் பேராசிரியர்கள் அடங்கிய குழுவை துணைவேந்தர் பாஸ்கர் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

அந்தக் குழுவினர், பேராசிரியரையும் அந்த மாணவியையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதில், பேராசிரியர் கோவிந்தராஜ் மீதான புகாருக்கு அடிப்படை ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், செல்போனில் பலமுறை அவர் பேசியதையும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. அதனால், இந்த விவகாரத்தை விசாகா கமிட்டியின் விசாரணைக்கு அனுப்ப துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில், சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அவர், பல்கலைக்கழகத்தின் டீன் பொறுப்பில் இருப்பதால், அதிலிருந்து அவரை நீக்கிவிட்டு வேறு பேராசிரியரை நியமிக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.