Published:Updated:

`பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் சஸ்பெண்டு’ - நெல்லை துணைவேந்தர் தகவல்

`பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் சஸ்பெண்டு’ - நெல்லை துணைவேந்தர் தகவல்
News

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாகத் துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி மாணவர்கள் பயின்று வருகின்றனர். தகவல் தொடர்பியல் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் கோவிந்தராஜூ மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பி.எச்.டி ஆய்வு மேற்கொள்ளும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு ‘மாணவர் சங்கம்’ என்கிற பெயரில் புகார் மனுவும் அதற்கு ஆதாரமான சி.டி-யும் அனுப்பப்பட்டு இருந்தது. 

அந்த ஆடியோவில் பேராசிரியர் ஒருவர் மாணவியுடன் பேசுவதுபோல இருந்ததால், அதன் குரலை ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் 4 பெண் பேராசிரியர்கள், 3 ஆண் பேராசிரியர்கள் அடங்கிய குழுவை துணைவேந்தர் பாஸ்கர் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்தக் குழுவினர், ஆடியோவில் இருந்த குரலுக்குச் சொந்தக்காரரான தகவல் தொடர்பியல்துறைத் தலைவர் கோவிந்தராஜூ மற்றும் ஆராய்ச்சி மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். 

பல்கலைக்கழகக் குழுவினர் நடத்திய விசாரணையின்போது, பேராசிரியரும் அந்த மாணவியும் அதில் இருப்பது தங்களுடைய குரல்தான் என்பதை ஒப்புக்கொண்டனர். இந்தப் புகாரில் அடிப்படை ஆதாரம் இருப்பதால் பேராசிரியர் கோவிந்தராஜூவை கடந்த 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்து பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு இன்று கூடி விவாதித்தது. அதில், பேராசிரியர் கோவிந்தராஜூ சஸ்பெண்ட் உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், இந்த விவகாரத்தை விசாகா கமிட்டி விசாரணைக்கு அனுப்பவும் ஒப்புதல் அளித்தனர். 

இது குறித்து பேசிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாஸ்கர், ``பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மீது பாலியல் புகார் வந்ததால், அது தொடர்பாகக் குழு அமைத்து விசாரணை நடத்தினோம். அதில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததால், அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளேன். இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்தும். அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தெரிவிக்க இயலும். 

பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பாலியல் மற்றும் ராக்கிங் தொடர்பான புகார்கள் வருமானால் அது பற்றி தீவிர விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்துக் கல்லூரிகளிலும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதால், பாதிப்புக்கு உள்ளாகும் மாணவிகள் புகார் அளிக்கலாம். அல்லது எனக்கு புகாரை அனுப்பலாம்’’ எனத் தெரிவித்தார்.