
கூல் டேட்டாநா.வருண்

* கி.பி 5-ம் நூற்றாண்டில், கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள், பனிக்கட்டிகளைப் பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டனர்.
* 1300-களில், மார்க்கோ போலோ என்பவர் ஐஸ்க்ரீமிற்கான வடிவத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.

* 1700-களில் அமெரிக்காவில் ஐஸ்க்ரீம் அறிமுகப் படுத்தப்பட்டது.
* 1776-ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில், முதல் ஐஸ்க்ரீம் பார்லர் திறக்கப்பட்டது.

* 1851-ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் முதன்முதலாகப் பெரிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

* 1904-ம் ஆண்டு, முதன் முதலில் ஐஸ்க்ரீம் கோன் ‘செயின்ட் லூயிஸ்’ என்ற அமெரிக்கரால் உருவாக்கப்பட்டது.
* 90% அமெரிக்கர்கள், எப்போதும் தங்களது ஃபிரிட்ஜில் ஐஸ்க்ரீம் வைத்திருப்பார்களாம்.

* ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப், சராசரியாக 50 முறை நம் நாவினால் சுவைக்கப்படுகிறது.

* அதிகம் விற்பனையாகும் ஐஸ்க்ரீம் ஃப்ளேவர், வெனிலா!
* அதிக அளவில் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நாடு, சீனா.
* உலகிலேயே மிக உயரமான ஐஸ்க்ரீம் செய்து கின்னஸ் சாதனை புரிந்தனர், நார்வே நாட்டிலுள்ள ஐஸ்க்ரீம் வியாபாரிகள். அதன் உயரம், 3.08 மீட்டர் (10.1 அடி)

* 2007-ம் ஆண்டு, புதுடெல்லியில் ஐஸ்க்ரீமுக்காகவே தனி மியூசியம் ஒன்று நிறுவப்பட்டது.