சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி? - சுட்டி ஸ்டார் சௌமியா

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி? - சுட்டி ஸ்டார் சௌமியா
பிரீமியம் ஸ்டோரி
News
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி? - சுட்டி ஸ்டார் சௌமியா

சாதனைஞா.சக்திவேல் முருகன், படம்: க.பாலாஜி

ந்த  ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், சுட்டி ஸ்டாராகவும், விகடன் மாணவ பத்திரிகையாளராகவும் இருந்த செளமியா தேசிய தர வரிசையில் 335-வது இடம்பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். சிவில் சர்வீஸ் தர வரிசையின்படி  ஐ.பி.எஸ். அதிகாரி, நிதித்துறை அதிகாரி ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எந்தப் பணியைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

``திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், துவரங்குறிச்சி பகுதியில் உள்ள கள்ளக்காம்பட்டிதான் என்னுடைய ஊர். ஏழாம் வகுப்பு படிக்கும்போது சுட்டி விகடன் இதழ்களைப் படித்துவந்தேன். மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டதில் கட்டுரை நன்றாக இருந்தது எனப் பாராட்டினர். இந்த நம்பிக்கையில், சுட்டி விகடனில் வெளியான ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் அறிவிப்பைப் பார்த்தவுடன் விண்ணப்பித்தேன். முதல் கட்ட தேர்வை மதுரையில் எழுதித் தேர்வானேன்.

நான் தேர்வான விஷயம் தெரிந்து என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் எனக்கு தனி மரியாதை தந்தார்கள்.  சுட்டிஸ்டார் பயிற்சி முகாம் ்திருச்சியில் நடந்தது. அதில், இறையன்பு ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார். அந்த மீட்டிங்கில் 'நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்' என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.அதை, முழுவதும் படித்தேன். அதில், ஐ.ஏ.எஸ் எல்லா விஷயங்களயும் தெரிந்திருக்க வேண்டும்என்று அவசியமில்லை' என்று குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு நம்பிக்கை கொடுத்தது.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி? - சுட்டி ஸ்டார் சௌமியா

தினமும் காலையில், பாட்டியும் மாமாவும் நியூஸ் பேப்பரைப் படித்து, அதில் வந்த பொது விஷயங்களை விவாதிப்பார்கள். அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் என்னுடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. அவை எனக்கு உதவியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது, விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்துக்குத் தேர்வானேன்.

இன்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு ஒரு வருடம் முழு நேரப் பயிற்சியில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறேன். சுட்டி விகடனைப் படித்து வரும் சுட்டிகளும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறமுடியும்.அதற்கு, தினசரி செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். அப்போது நல்ல விஷயங்கள் தட்டுப்படும். 

சுட்டி விகடனின் சுட்டி ஸ்டாராக இருந்து வெற்றிபெற்ற செளமியாவுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

படம்: க.பாலாஜி