சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

‘கௌ’கும்பர் தெரியுமா?

உங்களுக்கு ‘கௌகும்பர்’ பற்றித் தெரியுமா? 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிரம்பியது. நார்ச்சத்தும் உள்ளது. உடம்பின் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். இரும்பு, வைட்டமின், மெக்னீஷியம் சத்துகள் உள்ளன. உடம்புக்குக் குளிர்ச்சி தரும். இதன் தாயகம் இந்தியாதான். 3000 வருடங்களாகவே பூமியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தமிழில் ‘வெள்ளரிக்காய்’ என்பார்கள். ஹலோ... அது கெளகும்பர் இல்லே... குக்கும்பர் ( Cucumber) என்கிறீர்களா?   ஆரம்பத்தில், வெள்ளரிக்காயை ஆங்கிலேயர்கள் ‘கௌகும்பர்’ என்றுதான் அழைத்தார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

வலுவாக்கும் கொள்ளு!

நம் முன்னோர்கள் கண்டெடுத்த உணவுப் பொக்கிஷங்களான சிறுதானிய வகைகளில் ஒன்று, கொள்ளு. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இரும்புபோல வலுவாக்கும். கொள்ளுப் பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். கொள்ளு ரசம், சளியை விரட்டி அடிக்கும். கொள்ளும் அரிசியும் கலந்த கஞ்சி, மிகச்சிறந்த உணவு. இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுப் பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் குடித்தால் ஜிம்முக்கே செல்லாமல் உடல் எடையைக் குறைக்கலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

குட்டி மான்!

பொதுவாக, எல்லா உயிரினமும் குட்டியில் மிக அழகாக இருக்கும். துள்ளியோடும் மான்கள் இயல்பாகவே அழகு. அந்த மான் இனத்தில் மிகச்சிறிய வகை என்றால், எவ்வளவு அழகாக இருக்கும்? அப்படியான ஒன்றுதான், புடு (Pudu) என்ற மான் இனம். அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, பெரு போன்ற பகுதிகளில் காணப்படும் இவற்றில், தெற்குப் பகுதி புடு, வடக்குப் பகுதி புடு என இரண்டு வகை உண்டு. அதிகபட்சம் 45 செ.மீ உயரமும் 13 கிலோ எடையும் இருக்கும். இதில், உடம்பில் புள்ளிகள்போல வெள்ளை முடிகளுடன் இருக்கும் மான், கொள்ளை அழகுடன் இருக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சின்ன ஆந்தை!

ஆந்தை இனங்களில், வளை ஆந்தை      (Burrowing Owl) என்ற சிறிய வகை உண்டு. வட மற்றும் தென் அமெரிக்காவின் புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், வேளாண்மைப் பகுதிகளில் காணப்படும். தரையில்  தோண்டப்பட்டிருக்கும்  வளைகளில் தங்கும் இவை, மற்ற வகை ஆந்தைகள் போலன்றி, பகல் நேரத்திலும் சுறுசுறுப்பாக இருக்கும் எனினும், மற்ற ஆந்தைகள்போலவே, இரவு முதல் விடியற்காலை வரை வேட்டையாடும். இவை புல்வெளிகளிலேயே வாழ்வதால், கால்கள் நீளமாக உருவாக்கப்பட்டுள்ளன. வேட்டையாடும்போது வேகமாக ஓடவும் செய்யும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

புறா விடு செய்தி!

மன்னர்கள் காலத்தில் புறாக்கள் மூலமே பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டன. ஓர் ஒற்றன்போலச் செயல்பட்ட புறாக்கள் உண்டு. ஓலைச்சுவடி மற்றும் மெல்லிய தாளில் எழுதப்பட்டு, ஒரு சிறிய குழலில் அடைத்து, புறாக்களின் கால்களில் இணைத்து அனுப்புவார்கள். ஒரு புறாவால் 75 கிராம் எடையைக் கொண்டுசெல்ல முடியும். மன்னர்கள் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் புறாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒடிசாவின் கிராமப் பகுதிகளில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரத்தில் செய்திகளைக் கொண்டுசேர்க்க புறாக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

தெரியுமா?

* ‘சபர்மதி சிறைச்சாலை குஜராத் மாநிலத்தில் உள்ளது. மகாத்மா காந்தி 1922-ம் ஆண்டு சிறையில் இருந்தார்.’

* முதலைக்கு 60 பற்கள் இருக்கும்.