
வீ.கே.ரமேஷ் - படங்கள்: க.தனசேகரன்
ஆனந்த விகடனும், இந்தியன் ஆயில் காப்பரேஷனும் இணைந்து சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் புதிய திட்டத்தை அறிமுகப்ப டுத்தியுள்ளனர்.

இனி இந்த மண்டலத்தில் இயங்கும் இந்தியன் ஆயில் பங்குகளில் டூ விலருக்கு 300க்கும், 4வீலருக்கு ஆயிரத்துக்கு பெட்ரோல் போடுகிறவர்களுக்கு இலவசமாக ஆனந்த விகடன் இதழைத் தரவுள்ளனர்.
இதற்கான தொடக்க விழா மே 25ம் தேதி சேலம் குரங்குசாவடி ஜி.ஆர்.டி., ஹோட்டலுக்கு எதிரே உள்ள ஸ்ரீரங்கநாதன் அண்ட் கோ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்-கில் நடைப்பெற்றது. தொடக்க விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தமிழக எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர் சித்தார்த்தன், சேலம் மண்டல துணைப் பொது மேலாளர் பழனிகுமார், சீனியர் மேனேஜர் அப்பண்டி ராஜன் மற்றும் ஏரியா மேலாளர்கள், டீலர்கள், பங்க் ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வின் முடிவில் ஸ்கீம் அறிமுகம் செய்யப்பட்டு முதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஆனந்த விகடன் பிரதிகளை வழங்கினர்.

இதில் பேசிய இந்தியன் ஆயில் கார்பரேஷனின் சேலம் மண்டல துணைப் பொது மேலாளர் பழனிகுமார், ‘`இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் சேல்ஸ் புரமோஷன் ஸ்கீம் கேம்ப்பை நடத்தி வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகள் அளித்து வருகிறோம். தற்போது தமிழ் மக்களின் அடையாளமாகத் திகழ்கின்ற ஆனந்த விகடனோடு கைகோத்து இந்த ஸ்கீம் தொடங்கி இருக்கிறோம்.’’ என்றார்.
அடுத்துப் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தமிழக எக்ஸ்கியூடிவ் டைரக்டர் சித்தார்த்தன், ‘`நாம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கேம்ப் நடத்தி இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களோடு கைக்கோத்து வாடிக்கையாளர்களை மகிழ வைக்கிறோம். தற்போது தமிழகத்தின் முகவரியாக இருக்கும் ஆனந்த விகடன் நிறுவனத்தோடு கைக்கோத்து வாடிக்கையாளர்களுக்குப் பரிசு மழை வழங்விருக்கிறோம். இதில் ஊழியர்கள் மற்றும் டீலர்களின் பங்களிப்பும் முக்கியமானது.’’ என்றார்.