
ஸ்ரீ போஸ்ட்
ஓல்டு இஸ் கோல்டு!
ஆரோக்கியம் காக்கும் ஆட்டுக் கல்லும் அம்மிக் கல்லும் அரைத்துத் தந்த சுவையின் மகத்துவத்தை `ஓல்டு இஸ் கோல்டு' அழகுபட எடுத்துரைத்தது.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்

இட்லியில் இத்தனை வகைகளா!
இனி ‘அவள் விகடன்’ வாசகிகள் வீட்டில் யாரும் ‘இன்னிக்கும் டிபன் இட்லிதானா’ எனக் கேட்க மாட்டார்கள். அப்பப்பா... இட்லியில் இத்தனை வகைகளா! இனி விதவிதமான இட்லிகள் செய்து அசத்த வேண்டியதுதான்.
- சியாமளா ரங்கன், சென்னை- 28
பிச்சாயி அம்மன்
`தெய்வ மனுஷிகள்’ பகுதியில் இடம்பெற்ற பிச்சாயியின் கதை, பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள பிச்சாயி அம்மனைக் குறிப்பதல்ல. `ஜமீன்தார் ஆட்சிக்காலத்தில், பெருமாள் மலை அடிவாரத்தின் வழியாக குறிசொல்லச் சென்றார் பிச்சாயி. அப்போது, பிச்சாயியின் அழகைக்கண்டு இச்சைப்பட்டதால் அக்னியை மூட்டித் தீயில் இறங்கினார். அவரின் அபயக்குரல் கேட்டு, எல்லைக்குக் காவலாக விளங்கிய ஸ்ரீவீரப்ப சுவாமி தீயில் இறங்கிய பிச்சாயி அம்மனை கையேந்திக் காப்பாற்றினார். இதுவே பெருமாள் மலை அடிவாரத்தில் இருக்கும் பிச்சாயி அம்மனின் கதை' என்று ஸ்ரீபிச்சாயி அம்மன்-வீரப்பசுவாமி கோயில் குடிமக்கள் தெரிவித்துள்ளார்கள்.