
சுட்டி மெயில்

சிரிக்க சிரிக்க சரித்திரம் பகுதியில் தக்காளியின் ஆரம்ப காலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
- ஆர்.தாழை அரசன், தேனி..
படக்கதைகள் சுட்டி விகடனின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சின்னச் சின்ன செய்திகளின் தொகுப்பு அருமை.
- ரா.அலமேலு, கீழ் மேட்டூர்.
கடந்த இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டி எங்கள் அறிவுக்குச் சவால்விட்டது. நாங்கள் குழுவாக உட்கார்ந்து விவாதித்துப் புதிரை விடுவித்தோம்.
- சி.காவியா, தேவகோட்டை.
சென்ற இதழுடன் கொடுத்த சுட்டி க்ரியேஷன்ஸ் ‘ஹாட் ஏர் பலூன்’ சூப்பராகச் செய்தேன். அதைக் கயிற்றில் கட்டி ஹாலில் தொங்கவிட்டுள்ளேன். நன்றி சுட்டி விகடன்.
- மு.சபரி, தேவகோட்டை.
மொழி அறிவோம் பகுதியைப் படிப்பதன்மூலம் பல மொழிகளைக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.
- கு.சிவப்பிரியா, மயிலாடுதுறை.
போன இதழில் வந்த யுவினாவின் பேட்டி சூப்பர். இப்போதைய சுட்டிகள் படிப்புடன் கூடவே தங்களுக்கென ஒரு தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்பதைத் தெரிந்து கொண்டேன்.
- வி.சஞ்சனா, சென்னை-44.
படக்கதைகளில் எனக்கு நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது, ஜீபாவின் சாகசம் ஆகியவை ரொம்பப் பிடிக்கும்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம் அஞ்சல்.
அமைதி அமைதி போட்டோ படக்கதை அருமை. நடித்த சுட்டிகளின் முகபாவங்கள் இயல்பாக இருந்தன.
- என்.ஜெயம் ஜெயா, கோவை- 641 104.

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும் டாக்ட சவுண்டப்பன் எழுதிய ‘மூளை A to Z’ என்ற புத்தகம் பரிசு.
சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.
அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
தெரியுமா?
இந்திய நாடாளுமன்றத்தில் 552 மக்களவை உறுப்பினர்கள் இடம்பெறுவர்.