தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

மாலையில் பள்ளியிலிருந்து மகனை அழைத்துச்செல்லும்வேளையில், பள்ளிக்கூட வாயிலில் தோழி

நமக்குள்ளே...

ஒருவருடன் பேச நேர்ந்தது. அவருடைய குழந்தை, அப்போது அசௌகரியமாக நெளிந்துகொண்டே இருந்தாள். விஷயம் இதுதான்... இப்போதுதான் புதிதாக இந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள் குழந்தை. பள்ளியின் கழிவறை சரிவர சுத்தம் செய்யப்படாத காரணத்தால், அதைப் பயன்படுத்துவதே இல்லையாம். காலை ஏழரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும் குழந்தை, மாலை நான்கு மணிக்கு வீடு சென்றுதான் கழிவறையை உபயோகிக்கிறாளாம்.

தொடர்ச்சியாக 8 முதல் 9 மணி நேரம் வரை சிறுவர்/சிறுமியர் சிறுநீரை அடக்கிக்கொண்டு இருப்பது எத்தகைய கொடுமை? மணிக்கணக்காக சிறுநீரை அடக்கிவைப்பதால் பாக்டீரியத் தொற்று, யூடிஐ எனப்படும் சிறுநீர் வழி நோய்த்தொற்று, ப்ளாடர் இன்ஃபெக் ஷன் என்று பல பிரச்னைகள், சிறுவயதிலேயே குழந்தைகளைத் தாக்கும் அபாயம் உள்ளது.

லட்சங்களில் கட்டணத்தைக் கட்டாயமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலேயே இந்த நிலை. அப்படியென்றால், அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் நிலையை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது.

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவற்றைச் சுத்தம் செய்து பராமரிப்பதற்கென்று தனியாக யாரையும் பணிக்கு அமர்த்தி ஊதியம் கொடுக்கும் நிலையில் அந்தப் பள்ளிகள் இல்லை; இது, தேவையற்ற பிரச்னை என்று ஆசிரியர்களும் இதில் தலையிடுவதில்லை; விளைவு, உபயோகிக்காமலே பூட்டிக்கிடக்கின்றன பள்ளிகளின் கழிவறைகள். இதுதான் தமிழகத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் யதார்த்த நிலை.

நம்மில் எத்தனை பேர் குழந்தை பள்ளியில் சிறுநீர் கழித்ததா என்று கேட்டு அறிகிறோம்? பள்ளியின் கழிவறை சுத்தமாக இருக்கிறதா என்று குழந்தைகளிடம் விசாரிக்கிறோமா? குழந்தை மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால், பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் கேள்வி எழுப்பும் நாம், குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறை எப்படி இருக்கிறது, எங்கு இருக்கிறது, சுத்தம் செய்ய ஆட்கள் இருக்கிறார்களா, உபயோகிக்க எளிதாக இருக்கிறதா, தண்ணீர் வசதி சரிவர இருக்கிறதா, வயது வந்த பெண் குழந்தைகளுக்குத் திடீரென வரும் பீரியட்ஸ் நாள்களில் பயன்படுத்தும் வகையில் நாப்கின்கள் வைக்கப்பட்டுள்ளனவா, உபயோகித்த நாப்கின்களை வெளியேற்ற தனியாகக் குப்பைக்கூடைகள் உள்ளனவா என்று தெரிந்துகொண்டிருக்கிறோமா? நம் குழந்தைகளுக்கும், சரியான முறையில் கழிப்பறையை ஃப்ளஷ் செய்யக் கற்றுத் தந்திருக்கிறோமா?

மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும். வீடுகளில் உள்ள கழிவறைகள்போல பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் எனப் பொது இடங்களிலுள்ள கழிவறைகளை நாம் சுத்தமாக வைத்திருந்தால்தான், குழந்தைகளும் பள்ளிகளின் கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். சுத்தமான கழிவறை, நம் உரிமை மட்டுமல்ல, நம் கடமையும்கூட!

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்