
ஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்!

இன்றைய நிலைக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது... அனிதாக்கள், பிரதீபாக்கள், சுபஸ்ரீக்கள் பலியாவதைத் தடுப்பது என்பதை ஆணித்தரமாகச் சொல்லிய ஆசிரியரின் நம்பிக்கையை வளர்ப்போம்.
- ஐஸ்வர்யா, சென்னை-20
‘காலா’ படத்தை போலவே ஈஸ்வரி ராவின் பேட்டியும் கலர்ஃபுல்!
- அ.முரளிதரன், மதுரை-3
குழந்தைகளுக்கு, அப்பா அம்மா பெயரை வைக்கத் தயங்குகிற காலத்தில், தன்னை உயர்த்திவிட்ட, ஜானகி டீச்சரின் பெயரை, பெண் கதாபாத்திரங்களுக்கு வைத்து, நன்றியைக் காட்டும் கிரேசி மோகன், ‘கிரேட்’ மோகன்!
- என்.கோமதி, நெல்லை-7
காதல் திருமணம் பிரிவு, விபத்து, மரணப்படுக்கை என்று தன்னுடைய வாழ்க்கை கருகியது போல், மற்றவர்கள் வாழ்வும் அப்படி ஆகக் கூடாது என்று ‘நேசம்’ அமைப்பின் மூலம் மற்றவர்களை வாழவைக்கும் பிரேமா ‘வழிகாட்டும் ஒளி’தான்!
- எம்.செல்லையா, சாத்தூர்
இட்லி, அடுத்து சப்பாத்தி என வடக்கு தெற்கை சங்கமாக்கிவிட்டு கலக்கிவிட்டீர்கள் அத்தனை வகை சப்பாத்திகளையும் செய்து பார்க்க ஆசை. குறிப்பாக சித்தி கோக்கி சப்பாத்தியின் வீடியோ செய்முறை சூப்பர்!
- ஆர்.ரங்கநாயகி, சென்னை