Published:Updated:

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்!
News

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், PET – CT  ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான ஒப்பந்த ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனுவில்,``மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்குப் பெரிய அளவில் மருத்துவ சேவை அளித்துவருகிறது. 2,500 படுக்கை மேல் கொண்ட இம்மருத்துவமனைக்கு  தினமும் சுமார் 20,000 பேர் வந்து செல்வதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள புற்றுநோயியல் பிரிவில் நுண் கேன்சர் செல்லை கண்டுபிடிப்பதற்கான பெட் ஸ்கேன் வசதி இல்லை. எனவே ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை புற்றுநோயியல் பிரிவில் PET – CT  ஸ்கேன் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒருமாதத்தில் PET-CT ஸ்கேன் வசதியை ஏற்படுத்த கடந்த  2017 ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,``பெட் ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவதற்காக உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, சாத்தூரைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 120 நாள்களுக்குள் பெட் ஸ்கேன் வசதி அமைக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்கேன் கருவிகளை வாங்க உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு சாத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது எப்படி? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் அது குறித்த முழுமையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.