Published:Updated:

மீண்டும் முடங்கிய அணு உலை - பராமரிப்புச் செலவுக் கணக்கு கேட்கும் சுப.உதயகுமாரன்!

மீண்டும் முடங்கிய அணு உலை -  பராமரிப்புச் செலவுக் கணக்கு கேட்கும் சுப.உதயகுமாரன்!
News

கூடங்குளம் அணு உலை 109 நாள்கள் பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாளிலேயே முடங்கியதால், அதன் பராமரிப்புக்குச் செலவிடப்பட்ட தொகை குறித்த கணக்குகளை வெளியிட வேண்டும் என சுப.உதயகுமாரன் வலியுறுத்தி உள்ளார்.

கூடங்குளம் முதலாவது அணு உலையானது, வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிறுத்தப்பட்டது. அந்தப் பணிகள் நிறைவடைந்து 109 நாள்களுக்குப் பின்னர் நவம்பர் 17-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு இயக்கப்பட்டது. அதில், மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று செயல்பாடு நிறுத்தப்பட்டது. பராமரிப்புக்குப் பின்னர் செயல்படத் தொடங்கிய 3 நாள்களிலேயே மீண்டும் பழுது ஏற்பட்டு இருப்பது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இது தொடர்பாக அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``109 நாள் பராமரிப்புக்குப் பிறகு, மூன்றே நாளில் மீண்டும் முடங்கியது கூடங்குளம் முதல் உலை. அதற்காக செலவிடப்பட்ட பராமரிப்புச் செலவுகள் குறித்த கணக்கு வழக்குகளை எல்லாம் மக்களுக்குச் சொல்லுங்கள். `சுண்டைக்காய் கால் பணம், சுமட்டுக் கூலி முக்கால் பணம்’ என்கிற கதைதான் கூடங்குளத்தில் நடக்கிறது.

இந்த இறந்து பிறந்த குழந்தையை எத்தனை ஆண்டுகள் ஐசியு-வில் வைத்திருக்கப் போகிறோம். இதனால் எழும் ஆபத்துகளுக்கு யார் பொறுப்பு. எங்கே அந்த 15-நாள் நாராயணசாமி. எங்கே அந்த மன்மோகன் சிங். ஏன் வாய் திறக்க மறுக்கிறார் அணு சக்தித்துறையை கையில் வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி. இவர்கள் வெடிக்க வைக்காமல் விடமாட்டார்கள். வெடித்துத் தொலைத்தால் அழிவது நாம்தானே’’ என வேதனை தெரிவித்துள்ளார்.