Published:Updated:

கஜா புயல் நிவாரணப் பணியில் விகடனுடன் கைகோத்த வாசகர்கள்!

கஜா புயல் நிவாரணப் பணியில் விகடனுடன் கைகோத்த வாசகர்கள்!
News

துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். வாசகர்களாகிய உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, விகடனின் பொறுப்பு. உதவி செய்ய விரும்புவோர் க்ளிக் செய்க... https://bit.ly/2OWkuqI

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை மொத்தமாக சிதைத்துப் போட்டிருக்கிறது கஜா புயல். நூற்றாண்டு கண்டிராத இந்தப் பேரிழப்பை எதிர்கொள்ள  முடியாமல் துவண்டு கிடக்கிறார்கள் மக்கள். அரசின் கணக்குப்படி, 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட  வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 12,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்திருக்கின்றன. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கின்றன. தென்னை மரங்களையும், பணப்பயிர்களையும் வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் மொத்தமாக இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அதை எதிர்கொள்ள முடியாமல் ஒரத்தநாடு, நெடுவாசலைச் சேர்ந்த 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 1 லட்சம் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மின்சாரமில்லாமல் இருளில் தவிக்கின்றன. இவற்றையெல்லாம் சரிசெய்து மின்சாரம் வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஏராளமான மீனவர்கள், படகு, வலை போன்ற தொழில் கருவிகளை இழந்து நிற்கிறார்கள்.  

வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்குக் கைகொடுக்க வாசன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 10 லட்சம் வழங்கப்பட்டது. இந்தப் பணியில் கைகோக்க விகடன் வாசகர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏராளமான விகடன் வாசகர்கள் நிவாரண நிதியை அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். நடிகர் கார்த்தி விகடன் அலுவலகம் தேடிவந்து, தன் சார்பிலும் தன் சகோதரர் நடிகர் சூர்யா சார்பிலும் 20 லட்ச ரூபாயை விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனிடம் வழங்கினார். 

சென்னை ஹாரிஸ் அன்ட் மெனுக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆரிய ரத்னம், 2.5 லட்சம் வழங்கினார். சென்னை பெவா சிலிக்கான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் 2.5 லட்சம் வழங்கப்பட்டது. தவிர, ஏராளமான வாசகர்கள் தங்களால் இயன்ற தொகையை வாசன் சாரிடபிள் டிரஸ்ட்க்கு நேரடியாகவும் வங்கி மூலமாகவும் வழங்கி வருகிறார்கள். 

அதே வேகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விகடன் சார்பில் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெரும் சேதத்தைச் சந்தித்த, இதுவரை உதவிகளே கிடைக்காத பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, சனிக்கிழமை (24.11.2018) காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த சடையன்கோட்டகம், வேதாரண்யம் அருகேயுள்ள முதலியார்தோப்பு, வைரவன்பேட்டை, அண்ணாநகர், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி பகுதிகளில் முற்றிலும் வீடுகளை இழந்த 500 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா 1,500 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. (தார்ப்பாய் 1, பெட்சீட் 2, துண்டு 2, அரிசி 5 கிலோ, கொசுவலை 1, மெழுகுவத்தி 1 பாக்கெட், 400 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள்). அடுத்தகட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இதுவரை உதவிகளே கிடைத்திராத, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

உடனடி நிவாரணங்கள் மட்டுமன்றி விகடனின் வேராகிய வாசகர்களின் பங்களிப்போடு, பாதிக்கப்பட்ட மக்களின் நிரந்தர வாழ்வாதார மேம்பாட்டுக்கான பணிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த பணிகள் வாசகர்களுக்கு அப்டேட் செய்யப்படும். 

வாருங்கள்... நூற்றாண்டு காணாத இழப்பால் தவித்து நிற்கும் காவிரிப்படுகை மக்களுக்குக் கைகொடுப்போம்.

துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். வாசகர்களாகிய உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, விகடனின் பொறுப்பு. உதவி செய்ய விரும்புவோர் க்ளிக் செய்க... https://bit.ly/2OWkuqI

#GajaCyclone #RestoreDelta