Published:Updated:

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சுனில் அரோரா நியமனம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சுனில் அரோரா நியமனம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்
News

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சுனில் அரோராவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருக்கும் ஓம் பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தில் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அரோரா பதவியேற்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

அரோரா இதற்குமுன் 2017-ம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அரோராவின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும் என்றும் 2019-ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையின் கீழ் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

1980-ல் அரோரா ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியராகத் தன் பணியைத் தொடங்கியுள்ளார். தோல்பூர், அல்வார், நாஹௌர் மற்றும் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். 1993-1998 வரை ராஜஸ்தான் முதல் அமைச்சரின் செயலராகவும் 2005-2008 வரை முதலமைச்சரின் முதன்மைச் செயலராகவும் பதவி வகித்துள்ளார். தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை, தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸின் இயக்குநராகவும் இருந்துள்ளார்.

2016-ல் ஓய்வுபெற்ற அரோரா ப்ரசார் பாரதியின் ஆலோசகராவும் பெருநிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.