Published:Updated:

சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria
News
சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

Published:Updated:

சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria
News
சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

சிரியா, மத்தியதரைக் கடலின் கிழக்கில் அமைந்திருக்கும்  `ரத்த பூமி’.  2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர், இன்றுவரை நீடிக்கிறது. சில தினங்களுக்கு முன் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட ரசாயனக்குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இப்படியாகக் குண்டுகளின் சப்தத்துடன் தொடர்கிறது சிரியா மக்களின் பகலும் இரவும்.


 

பஷர் அல் அசாத் சிரியாவின் அதிபராக 2000-ம் ஆண்டு பதவியேற்றார். அசாத்தின் ஆட்சியில் சிரியாவின் ஒரு பெரும் பிரிவினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர். அசாத்துக்கு எதிராக சின்னச் சின்ன அமைதி வழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்படியே 10 ஆண்டுகள் கழிந்தன. ஆனால், அசாத்தின் ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அரசியல் சுதந்திரமற்ற சூழல், வேலையின்மை, ஊழல், அடக்குமுறை உள்ளிட்டவற்றை எதிர்த்து பிப்ரவரி மாதம், 2011-ம் ஆண்டு டெர்ரா நகரில் ஒரு பிரிவினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை அரசு கடுமையாகத் தண்டித்தது. அரசுப் படைகள் ஏவிவிடப்பட்டன. அமைதி வழிப் போராட்டத்தை முடக்க அரசுப் படைகளை ஏவிவிட்டது, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கின. கிளர்ச்சியாளர்களின் குரல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அரசுப் படைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள போராட்டக்காரர்களும் ஆயுதங்களைத் தூக்கினர். இன்னொரு புறம் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையுடைய சிரியாவில், ஷியா முஸ்லிமான பஷார் அல்  அசாத் ஆட்சிசெய்வதைப் பிடிக்காமல், ஒரு தரப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.  


 

ஐ.எஸ் இயக்கமும் முழு வீச்சில் போரிடத் தொடங்கியது. பொதுமக்கள் பலர் ஐ.எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆக,  சிரியா அதிபர் அசாத்துக்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கப்பட்ட ஒரு  போராட்டம், உள்நாட்டுப் போராக உருமாறியது. அமெரிக்கா, சவுதி, ரஷ்யா மற்றும் இரான் உள்ளிட்ட அந்நிய சக்திகள் சிரியாவுக்குள் காலடி எடுத்து வைத்தன. எனவே, சிரியாவில் ஆயுதங்கள் அதிக அளவில் புழங்கின.  அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் உள்நாட்டுப் போரானது. அசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளிக்க, கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்ட, சிரியா வானின் நீல நிறம் மறைந்து புகைமூட்டமாக மாறிவிட்டது.

சிரியாவின் பெரிய நகரான அலெப்போ, அழிவின் விளிம்பில் உள்ளது. சிரியாவில், கடந்த ஏழு ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா-வின் அறிக்கைபடி 5.6 மில்லியன் மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்தனர்.  சிரியவில்  சமீப காலமாக ரசாயன ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. சிரியாவில் சுவாசிக்கும் காற்றும், நிலத்தடி நீரும் அசுத்தமாகிவிட்டது. வாழ்வதற்குத் தகுதியற்ற நாடாக சிரியா மாறி வருகிறது. ஐ.நா-வின் அமைதிப் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகள் சிரியா போரின் உக்கிரத்தைப் பிரதிபலிக்கின்றன.  கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து நாட்டைக் கைப்பற்றியே தீருவோம் என்று சிரியா அரசு கர்ஜிக்க, பலியாவது என்னவோ பொதுமக்கள்தாம்.


 

இத்தனைக்கும் காரணம் என்ன? சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் உண்மையில் எங்கு எப்படித் தொடங்கியது, 2011 -ம் ஆண்டு டேராவில் யார் போராட்டத்தைத் தொடங்கியது என்பதுகுறித்த தெளிவான வரலாற்றைத் தேடியதில், ஜேமி டோரானின் ஆவணப்படம் கண்ணில் தென்பட்டது.  2017-ம் ஆண்டு ஜேமி டோரான் என்னும் திரைப்பட தயாரிப்பாளர் போருக்குக் காரணமான ஒரு சம்பவத்தைக் கண்டறிந்து  Aljazeera-தளத்தில் ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். 

உண்மையைத் தேடி சிரியாவுக்குப் பயணித்த ஜேமி பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு.

 `ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், என் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த நண்பர்களில் சிலர், அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள். சிரியா போர் எப்படித் தொடங்கியது? என்னும் கேள்வியை என் நண்பர்கள் மத்தியில் முன்வைத்தேன்.  தீவிரவாதிகளால் தொடங்கப்பட்டது என்றார் ஒரு நண்பர். மற்றொரு நண்பர், ஐ.எஸ் இயக்கத்தால் தொடங்கப்பட்டது என்றார்.  இந்தப் பதிலை அனைவரும் ஆமோதித்தனர். ‘ஐ.எஸ் என்ற இயக்கம் சிரியாவில் காலூன்றுவதற்கு முன்னரே போர் தொடங்கிவிட்டது’ என்றேன் நான். அவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்கள். நான் என் லேப் டாப்பில் சேகரித்து வைத்திருந்த தரவுகளை அவர்களுக்குக் காண்பித்தேன். வாயடைத்துப்போனார்கள். அவர்கள் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் இன்றளவும் சிரியா போருக்கான உண்மைக் காரணத்தை ஆராய முன்வரவில்லை.

சிரியா போரை தொடங்கியது தீவிரவாதிகளோ ஐ.எஸ் அமைப்போ இல்லை. 14 வயது சிறுவர்கள். நம்ப முடியவில்லை அல்லவா. ஆனால், அதுதான் உண்மை. 2011-ம் ஆண்டு, அசாத்துக்கு எதிராக நாட்டு மக்கள் அதிருப்தியில் இருந்த சமயம். பிப்ரவரி மாதம், டேரா என்னும் பகுதியில் பதின்பருவத்துக்கே உரிய துடிப்புடன் இருந்த அந்த மூன்று சிறுவர்கள், அசாத் அரசுக்கு எதிராக சில ஸ்லோகன்களைத் தங்கள் பள்ளிச் சுவரில் ஸ்ப்ரே பெயின்ட் மூலம் கிறுக்கினர்.  சில தினங்களுக்குப் பின்னர் ஒருநாள், அதிகாலை 4 மணிக்கு போலீஸ் அவர்களைத் தேடிவந்தது. கைதும் செய்தது. சிறையில் அடைத்து சித்திரவதைசெய்தனர். சிறுவர்களின் பெற்றோர் சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது? அவர்கள் எங்கே? என்று கோஷமிட்டனர். அதற்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த பதில் மக்களை கோவத்தின் உச்சிக்குக் கொண்டுசென்றது.   ``உங்கள் பிள்ளைகளை மறந்துவிடுங்கள். அவர்கள் இனி வர மாட்டார்கள். வேறு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் உங்களில் மனைவியை எங்களிடம் அனுப்புங்கள். வேண்டுமானால் அதற்கு நாங்கள் உதவுகிறோம்” என்று தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். அந்த வார்த்தைகள்தான் டேரா பகுதி மக்களைச் சீற்றம்கொள்ளச் செய்தன. சிறுவர்களை விடுவிக்கும்படி டேராவில் மட்டுமல்லாது நாட்டின் பிற இடங்களிலும் போராட்டங்கள் தொடங்கப்பட்டன. இதுதான் உண்மையான பின்னணி’ என்று விவரித்துள்ளார். 

2011 டேரா போராட்டம்.. 

14 வயதிலேயே கிளர்ச்சிசெய்து, போருக்கு விதைபோட்ட அந்த மூன்று சிறுவர்களில் ஒருவரான மொவாவியா சியஸ்னேவை ( Mouawiya Syasneh) சந்தித்து, அவரின் வாக்குமூலத்தை ஆவணப்படத்தில் பதிவுசெய்துள்ளார்  ஜேமி. அந்தச் சிறுவன் பகிர்ந்த திடுக்கிடும் தகவல்கள் பின்வருமாறு...


 

 `'எகிப்திலும், துனிசியாவிலும் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை நாங்கள் டி.வி-யில் பார்த்தோம். பள்ளியில் இதுகுறித்துப் பேசினோம். பெயின்ட்டை வாங்கிவந்து அரசுக்கு எதிராக வாசகங்களைப் பள்ளிச் சுவரில் எழுதினோம். அதிகாலை என் வீட்டையும் என் நண்பர்கள் வீட்டையும் போலீஸ் சுற்றி வளைத்தன. 45 நாள்கள் நாங்கள் சிறையில் இருந்தோம். எங்களை அடித்துத் துன்புறுத்தினர். எங்கள் குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேசி அவமானப்படுத்தினர். உரித்த கோழிகளைப் போன்று எங்களை சுவரில் தொங்கவிட்டனர். கழிவறைக்கு அழைத்துச்சென்று ஷவரைத் திறந்துவிட்டு, எங்கள்மீது மின்சாரத்தைப் பாய்ச்சினர். எங்களுக்காக எங்கள் பெற்றோர்கள் போராட்டம் நடத்துவதாகச் சொல்லி எங்களை அடித்து உதைத்தனர். ஒருகட்டத்தில் எங்களை விடுவித்தனர். சிதைந்துபோன எங்கள் முகங்களையும், உடலில் இருந்த காயங்களையும் பார்த்த எங்கள் பெற்றோர்களின் கோபம் இன்னும் அதிகமானது. போராட்டங்கள் உக்கிரமானது. ஆனால், இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எனக்கு இப்போது 20 வயது ஆகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் கொல்லப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் முகங்கள் என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது'’ என்று தெரிவித்துள்ளார். 

அமைதியான வழியில் முடியவேண்டிய போராட்டங்களை உள்நாட்டுப் போராக மாற்றியது சிரியா அரசுதான் என்று அழுத்திச்சொல்கிறது இந்த ஆவணப்படம். ஐ.நா-வின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் ஒத்துழைக்காவிட்டால்,  `சிரியா’ மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிவிடும்! 

ஆவணப்படத்தின் லிங்க்  : The Boy who started the Syrian War