Published:Updated:

கேரளாவுக்குக் கைகொடுப்போம் #LetsHelpKerala

கேரளாவுக்குக் கைகொடுப்போம் #LetsHelpKerala
News
கேரளாவுக்குக் கைகொடுப்போம் #LetsHelpKerala

வணக்கம்...

கி புயல் வந்துசென்று இன்னும் ஓர் ஆண்டுகூட முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் ஒரு பேரிடரை எதிர்கொண்டு துயரத்தில் தத்தளிக்கிறது கேரளா. கடந்த சில வாரங்களாகப் பெய்யும் தென்மேற்குப் பருவமழை அம்மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறது. 1924-க்குப் பிறகு அம்மாநிலம் சந்திக்கும் மிகப்பெரிய வெள்ளம் இது. இதுவரை கேரள வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல்முறையாக மாநிலத்தின் 27 அணைகளும் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளன. கேரளாவில் இருக்கும் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ‘வரலாறு காணாத பெரும் பேரிடர்’ என இதனை அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

கடந்த 9-ம் தேதியில் இருந்து 12-ம் தேதிவரை மட்டும் மொத்தம் 37 பேர் இந்த இயற்கைப் பேரிடருக்கு பலியாகியிருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு, தொழில், நிலம், உடமைகள் என வாழ்வாதாரத்தையே முற்றிலுமாக இழந்திருக்கின்றனர். இதுவரை கணக்கிடப்பட்டுள்ள அளவின்படி மட்டும் 2,000 வீடுகள் முழுமையாகச்  சேதமடைந்துள்ளன. 10,000 கி.மீ தூரத்திற்கான சாலைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மொத்த சேத மதிப்பு குறைந்தபட்சம் 8,316 கோடி ரூபாய். இவையனைத்தும் முதல்கட்டமாக அங்கிருந்து வரும் தகவல்கள் மட்டும்தான். 

கேரளாவுக்குக் கைகொடுப்போம் #LetsHelpKerala

நேற்றுவரை தங்கள் வீடுகளில் குடும்பமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், இன்று தங்கள் குடும்பத்தில் சிலரை இழந்து நிற்கிறார்கள். நேற்றுவரை தங்கள் வீடுகளில் அமர்ந்து, உழைப்பின் பலனாய்க் கிடைத்த உணவை அருந்தியவர்கள், இன்று சிறப்பு முகாம்களில் தங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அழகிய கேரளம் சிதைந்துகிடக்கிறது. இவர்களின் துயரம் அறிந்து மாநில அரசும் மத்திய அரசும் நிவாரணப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மாநில முதலமைச்சரின் சிறப்பு நிவாரண நிதிக்கு நிதி அனுப்பச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பினராயி விஜயன்.

இந்தத் துயர்துடைக்கும் பணியில் விகடனும் தன்னை இணைத்துக்கொள்கிறான். கேரள மக்கள் சந்தித்துள்ள இழப்புக்கு முன் இத்தொகை சிறியது என்றாலும் விகடன் தன் பங்காக ரூபாய் 10 லட்சம் வழங்குகிறான்.

ஆசிரியர்

பா.சீனிவாசன்

நீங்களும் எங்களுடன் இணைய விரும்பினால்...

கா
விரி டெல்டா மாவட்ட வறட்சி,  ‘தானே’ புயல், சென்னை பெருமழை வெள்ளம் ஆகிய இக்கட்டான காலங்களில் விகடன் துயர் தீர்க்கும் பணிகளில் முன்நின்றது. அப்போது, ‘நாங்களும் உங்கள் பணிகளில் இணைகிறோம்’ என்று விகடன் வாசகர்கள் எங்களோடு கைகோத்தார்கள்.

இப்போதும் கேரளாவுக்குக் கைகொடுப்போம் என நினைக்கும் வாசகர்கள் தங்கள் பங்களிப்பையும் அனுப்பலாம். வாசகர்களின் பங்களிப்பை உரிய முறையில் கேரள அரசிடம் கொண்டு சேர்ப்பது விகடனின் பொறுப்பு.

உதவும் உள்ளம் கொண்டவர்கள்  Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052  (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்: IDIB000C032, ஸ்விப்ட் கோட்: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்:   DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கேரளாவுக்குக் கைகொடுப்போம்’ அல்லது ‘Lets Help Kerala’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம்.

வாருங்கள்... நம் சகோதரர்களின் துயர் துடைப்போம்!