Published:Updated:

நிலம் இல்லாவிட்டாலும் இயற்கை விவசாயம் சாத்தியம்! - சென்னைப் பெண்ணின் புதிய முயற்சி

நிலம் இல்லாவிட்டாலும் இயற்கை விவசாயம் சாத்தியம்! - சென்னைப் பெண்ணின் புதிய முயற்சி
News

இயற்கை பேரிடர், வருமானம் குறைவு, வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதிலும் சென்னை போன்ற நகரங்களில் விவசாயம் என்பதே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்துவரும் சூழ்நிலையில்... நிலமே இல்லாவிட்டாலும் விவசாயம் சாத்தியம் என்று வாக்குறுதி தருகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை விவசாயி அர்ச்சனா.

``விவசாயிகள் பொருளாதார ரீதியாக நிறைய கஷ்டப்படுறாங்க, அதேநேரம் 100 சதவிகிதம் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் நமக்கும் கிடைக்கிறது இல்ல, அதான் நாமளே விவசாயம் பண்ணலாம்னு முடிவு எடுத்து களத்தில் இறங்கிட்டேன். அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான நான் விவசாயம் பண்ணப் போறேன்னு சொன்னதும் நிறைய பேர் எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு அட்வைஸ் பண்ணினாங்க. இப்படி எல்லோரும் ஒதுங்குகிறதைவிட படிச்ச இளைஞர்கள் நிறைய பேரை விவசாயத்துக்குள் கொண்டு வரணும்னு முடிவு எடுத்தேன்.

சென்னைக்கு அருகில் உள்ள இடங்களைத் தேர்வு செய்து அந்த நிலத்துக்கு உரிய விவசாயிகளிடம் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதை 1,000 சதுரடி நிலங்களாகப் பிரித்து 30 குடும்பங்கள் கூட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். இந்தக் கூட்டு விவசாயத்தில் எங்களுடன் இணைய நிலத்துக்காக மாதம் 3,000 ரூபாய் சந்தா என்பதை நிர்ணயித்துக்கொண்டோம். விவசாயத்தை மீட்டு எடுக்கும் ஆர்வம் கொண்ட நிறைய பேர் இத்திட்டத்தில் கைகோத்தனர். விதை விதைப்பதில் ஆரம்பித்து அறுவடை செய்வது வரை எல்லாமே அவர்களே செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். ஆனால், விவசாய ஆர்வம் இருந்த பலருக்கும் அதன் அடிப்படை பற்றி தெரியாததால் விவசாயிகளைக் கொண்டு பயிற்சிகள் கொடுத்தோம்.  

விவசாயத்தில் ஆர்வம் இருந்தும் நேரமின்மையைப் பலர் காரணம் காட்டினார்கள். அவர்களின் ஆர்வத்தை மதித்து நிலங்களைப் பராமரிக்கும் பொறுப்பை உரிய விவசாயிகளிடம் கொடுத்தோம். இதுவரை 25 குடும்பங்கள் எங்களுடைய விவசாயத் திட்டத்தில் சேர்ந்து உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுடன் விவசாயம் செய்வதைப் பார்க்கும்போது விவசாயத்துக்கு அழிவு இல்லை என்பதை உணர முடிகிறது. விவசாயம் செய்யும் ஒவ்வொருவரும் வாரமும் ஏழு கிலோ காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து எடுத்துச் செல்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட பலரும் விவசாயம் செய்ய எங்களை அணுகுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் விவசாயத்தைக் கற்றுக்கொடுக்க ஆர்வமாக இருக்கிறோம்'' என்றார் புன்னகையோடு.

செழித்து வளரட்டும்!