Published:Updated:

22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி!

22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி!
News

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் அட்சி முடிவடைந்த நிலையில் நள்ளிரவு முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி!

இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 87 தொகுதிகள் கொண்ட காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களும், காங்கிரஸ் 12 இடங்களும், பா.ஜ.க 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும்  பெரும்பான்மை பெறவில்லை. அதனால் யாருடன் யார் கூட்டணி சேர்வது என்ற மிகப் பெரிய விவாதம் நிலவியது. அதனால் தேர்தல் முடிந்து அடுத்த இரண்டு மாதத்துக்கு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.

22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி!

இதையடுத்து, பா.ஜ.க மற்றும் சுயேச்சை கட்சிகளுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. கடந்த இரண்டு வருடங்களாக  மெஹ்பூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்தி வந்தார். இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் உச்சத்தை எட்ட, தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதாக பா.ஜ.க அறிவித்தது. இதனால் மெஹ்பூபா முஃப்தி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி!

ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இது தொடர்பான ஆலோசனை நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பின் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து நள்ளிரவு முதல் காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் இந்தியா எல்லைப் பகுதியில் உள்ளதால் அங்கு தீவிரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் போன்ற பல சண்டைகள் நடக்கும். எப்போதும் பதற்றமாகவே உள்ள காஷ்மீர் மாநிலத்தில் 1996-க்குப் பிறகு அதாவது  22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

22 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி!