தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

மனநலம் குறித்து மனம்திறக்கும் தீபிகா!

பா
லிவுட் நடிகை தீபிகா படுகோன், உலக மனநல தினமான கடந்த அக்டோபர் 10 அன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

2014-ம் ஆண்டு `கிளினிக்கல் டிப்ரஷன்' எனப்படும் மனச் சோர்வுக்கு ஆளாகியது குறித்துப் பேசிய தீபிகா, இந்தியாவில் 90% மக்கள் மனநல நோய்களுக்கு மருத்துவரை நாடுவதே இல்லை என்றும் கூறியிருக்கிறார். “காலை எழுவதே மிகக் கடினமாக இருந்தது. அந்த நாளைச் சந்திக்கும் துணிவு என்னிடம் இல்லை. என்னைச் சுற்றி யார் இருந்தாலும் உடைந்து போய்விடுவேனோ என்ற பயத்தில், ஒதுங்கியே இருந்தேன்” என்று கூறியவர், `நான் ஒரு டிப்ரஷன் சர்வைவர்’ என்ற தலைப்பிட்டுத் தன் படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

“எனக்கு நேர்ந்ததை 2015-ம் ஆண்டே நான் மனம்திறந்து சொல்லிவிட்டேன்” என்ற தீபிகா, “இந்தியாவில் மனநோய் பற்றி பேசுவது இன்னமும் சாத்தியப்படாததாகவே இருக்கிறது. துணிந்து சொல்லுங்கள். #நாட்-அஷேம்ட் என்ற ஹேஷ் டேக்கை உபயோகித்து தைரியமாகப் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். இன்னும் வெளிப்படையாக மக்கள் தங்கள் மனநோய் பற்றிப் பேச முன்வர வேண்டும் என்பதே தன் ஆசை என்றும் கூறியிருக்கும் தீபிகா, மிக விரைவில் காதலர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

துணிச்சல் நாயகிக்குத் திருமண வாழ்த்துகள்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சிந்திக்க வைக்கும் சிறப்பான கொலு!

வராத்திரி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான வாணி மூர்த்தி `சுவச்ச கொலு’ ஒன்றை வடிவமைத்திருந்தார். முதல் படியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக எளிதில் மக்கக் கூடிய பொருள்களை அடுக்கியிருக்கிறார். துணி நேப்கின்கள், துணிப்பைகள், கழுவிப் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கரண்டிகள் ஆகியவை வரிசைகட்டுகின்றன. அடுத்த அடுக்கில் வீட்டிலேயே அவர் தயாரிக்கும் தரை மற்றும் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தும் கிளீனர், ஷாம்பூ, ரசாயனம் இல்லாத சோப் போன்றவற்றையும் அடுக்கியிருக்கிறார். பத்தாண்டுகளாக ‘கம்போஸ்ட்டிங்’ முறைப்படி சமையலறையில் வீணாகும் பொருள்களைக்கொண்டு உரம் தயாரிப்பதையும் கண்காட்சியாக வைத்துள்ளார். “தினமும் நான் கோயிலுக்குப் போவதில்லை; ஆனால், சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க என்னால் இயன்றதைச் செய்வதன் மூலம், இந்த பூமித்தாயை வணங்குகிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும்” என்று கூறுகிறார் வாணி.

கொலு வித் எ ரீசன்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

`மேன் புக்கர்’ விருது பெற்ற அன்னா பர்ன்ஸ்!

ங்கிலாந்தில் இலக்கியத்துக்கென தரப்படும் தலைசிறந்த விருதாக `மேன் புக்கர்’ கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஐம்பதாவது மேன் புக்கர் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறார் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 56 வயதான அன்னா பர்ன்ஸ். அன்னாவின் மூன்றாவது நாவலான `மில்க்மேன்’ என்ற படைப்புக்கு இந்த உயரிய விருது கிடைத்திருக்கிறது. அன்னாவின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த நாவல், போரில் சிக்கிக்கொண்ட அயர்லாந்தைக் கண்முன் காட்டிவிடுகிறது. போர்க்காலத்தில் ஒரு சிறு நகரில் உள்ள பெண் ஒருத்தி சந்திக்கும் புரளிகள், அவள் மீதான சமூகத்தின் அடக்குமுறை ஆகிவற்றைப் பற்றி துணிவுடன் பேசுகிறது `மில்க்மேன்’.

“இந்த நாவலில் யாருக்கும் நான் பெயர் வைக்கவில்லை. செய்யும் தொழில் அல்லது சமுதாயத்தில் அவர்களது இடம் ஆகியவற்றை மட்டுமே அடையாளமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். கதை மாந்தர்களுக்கு பெயர் சூட்டிவிட்டால், கதை உயிரற்றதாக மாறுவதை உணர்ந்தேன்” என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பர்ன்ஸ். லண்டனின் கில்டு ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், `டச்சஸ் ஆஃப் கார்ன்வால்' கோப்பையை வழங்க, மேன் புக்கர் கமிட்டியின் தலைவர் லூக் எல்லிஸ், 50,000 பவுண்டுக்கான காசோலையை அன்னாவுக்கு வழங்கினார்.

வாழ்த்துகள் அன்னா!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பதக்கம் வெல்ல உதவிய `பலே’ பாட்டி!

 `கே
பிசி’ (கவுன் பனேகா குரோர்பதி) நிகழ்ச்சியின் `ஹாட் ஸீட்’டில் அமர்ந்திருந்த இந்திய ஹாக்கி அணியின் தலைவர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், அமிதாப்பிடம் பகிர்ந்த சம்பவம் இது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் ஒரு பதக்கம்கூட வெல்லாமல் தோல்வியுடன் நாடு திரும்பப்போவதை நினைத்துக் கலங்கியிருந்தாகக் கூறினார். அப்போதுதான் 73 வயதான மூதாட்டி பேசிய வைரல் வீடியோவைப் பார்த்தாராம் ஸ்ரீஜேஷ். “73 ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்தது எல்லாம் ஒரே நாளில் தண்ணீர் கொண்டுபோய்விட்டது. ஆனால், நான் கலங்கமாட்டேன். உடலில் உயிர் உள்ளவரை போராடுவேன்; தொலைத்ததைவிட இரண்டு மடங்கு சம்பாதித்துச் சேர்த்து வைப்பேன்” என்று அழுதபடி காணொலியில் பேசியிருந்தார் அந்த மூதாட்டி. போட்டிக்கு முன்னர் இந்த வீடியோவை அணியினருக்கு அனுப்பி, “அழுவதற்கு நிறைய நேரம் இருக்கிறது. ஆனால், நாட்டுக்குப் பதக்கத்துடன் செல்கிறோமா, வெறும் கையுடன் திரும்பப் போகிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார் ஸ்ரீஜேஷ். அரையிறுதியில் மலேசிய அணியிடம் தோற்றிருந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டு, பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து வெண்கலத்தைக் கைப்பற்றியது. `கேபிசி’ நிகழ்ச்சியில் 12.5 லட்சம் பரிசு வென்ற இந்திய ஹாக்கி அணி, முழுப் பணத்தையும் கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தது.

வழிகாட்டிய பாட்டிக்கு வணக்கங்கள் பல!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

முறையான புகார்...  சரியான வழி!

டந்த சில வாரங்களாக இந்தியா முழுக்க பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் மீடூ இயக்கம் வலுவடைந்து வருகிறது. ஒருவழியாக அரசு இயந்திரமும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பெண்கள் பலர் எழுத்துபூர்வமாக ஆண்கள்மீது பாலியல் அத்துமீறல் புகார்கள் அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அனைத்துப் பணியிடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஆணையத்தின் தலையாய கடமை என்று அறிவித்ததுடன், இதுபோன்ற பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியிருக்கிறது. ncw.metoo@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் புகார்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்திருக்கிறது. `வெறுமனே பெயர்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதோடு நிற்காமல், முறையான புகார்கள் தருவதே சரியான வழி’ என்றும், பெண்கள் துணிவுடன் முன்வந்து எழுத்துபூர்வ புகாரளிக்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு அறிவுறுத்துகிறது.

உடைத்துப் பேசக் கிடைத்திருக்கும் ஒரு வழி!