
ஸ்மார்ட் டைம்!
குழந்தைகளின் நினைவுத்திறன், கவன ஒருங்கிணைப்பு மற்றும் புதிர்களை விடுவிக்கும் திறனை அதிகரிக்க, பிளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த ஆப், ‘லாஜிக் மாஸ்டர்’. உயர்தர கிராபிக்ஸ்களோடு 200-க்கும் மேற்பட்ட புதிர்களையும் உள்ளடக்கியிருக்கிறது இந்த ‘லாஜிக் மாஸ்டர்’.

குறைவான நேரத்தில் அதிகமான புதிர்களை விடுவிப்பதே இதன் இலக்கு. அதிக மதிப்பெண்களை எடுப்பதன் மூலமே அடுத்த லெவலுக்குள் நுழைய முடியும். புதிர்களைத் தொடர்ச்சியாக விடுவிப்பதன் மூலம், குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்க இந்த ஆப் உதவுகிறது.
ஷட்டர்பிரைய்ன்- பிஸிக்ஸ் பஸல் (Shatterbrain - physics puzzle)இயற்பியலின் அடிப்படையைக் குழந்தைகள் மனதுக்குள் சேர்க்க உதவுவதே ‘ஷாட்டர் பிரைய்ன்’. புள்ளிகள், கோடுகள் அல்லது தேவையான உருவங்களை வரைந்து, இயற்பியல் அடிப்படையிலான புதிர்களை விடுவிப்பதே இந்த கேமின் இலக்கு.

ஒரு புதிரை விடுவிக்கப் பல வழிகள் இருக்கும். ஆனாலும், மிகச் சரியான வழியைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க வேண்டும். குறைவான நேரத்தில் ஒரு புதிரை விடுவிப்பதன் மூலமே, அதிக ஸ்டார்களைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெறமுடியும்.
- ச.முத்துகிருஷ்ணன்