சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

சுட்டி மெயில்

சுட்டி மெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி மெயில்

சுட்டி மெயில்

‘சூப்பர் ஹீரோஸ்’ பற்றிய புதிய தொடர் அருமை. இந்த இதழில் வந்த ‘சிகரங்களை வென்ற சீன்

சுட்டி மெயில்

ஸ்வார்னெர்’, என்னை ஊக்கப்படுத்தினார்.

- எஸ்.பொன்னி, ஓமலூர், சேலம்.

சென்ற இதழ் சுட்டி விகடனில் வெளிவந்த சிறுகதைகள் அருமை. இதில் இடம்பெறும் படக்கதைகளை விரும்பிப் படிக்கிறேன்.

- மு.தமிழ்ச்செல்வி, சுந்தரமுடையான், இராமநாதபுரம்.

‘இவரைத் தெரிஞ்சுக்கலாம்’ பகுதியில் வந்த ‘மொட்டை மாமா’ என்கிற இனியன் பற்றிய தகவல் சூப்பர்.  அவர், எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

- க.கலைமதி, நெல்லிக்குப்பம், கடலூர்.

வால்ட் டிஸ்னி உருவாக்கிய சுட்டிகளின் ஹீரோவான, ‘மிக்கி மவுஸு’க்கு 90 வயது பற்றிய கட்டுரை மிகவும் அருமை. அதை அட்டைப் படமாகவும் வெளியிட்டதுக்கு வாழ்த்துக்கள்.

 - க.யாழினி, பானாவரம், மேட்டூர்.

சுட்டி மெயில்

‘உலா வந்த ஓவியர்கள்’ பக்கம் வியப்பூட்டும் தகவலுடன் இருந்தது. ஓவியக்கலைக்கு உயிரூட்டிய ஜப்பானிய மாணவர்களுக்குப் பாராட்டுகள்.

- ச.ஷகிலா பானு, தூத்துக்குடி.

பேட்மின்டன் புயல் சிந்துவின் போட்டோ கதை மிகவும் அருமை. அவரது முழு வரலாற்றையும் 4 பக்கங்களில் கொடுத்தது சூப்பர். இதேபோல நிறைய  விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

- கே.இராமச்சந்திரன், வாழப்பட்டு, பண்ருட்டி.

‘திருநெல்வேலி 200’ இன்ஃபோ புக் அருமை. நெல்லையைப் பற்றி இதுவரை அறியாத பல புதிய தகவல்களை அறிந்துகொண்டோம். எங்கள் ஊரைப் பற்றி எப்போது கொடுப்பீர்கள்?

- ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

கும்கியாக மாறிய ஜீபாவின் சாகசம் மிகவும் திரில். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சாகசம் செய்யும் ஜீபாவும், கூட்டாளிகளான சின்னு மற்றும் மின்னுவும் அசத்துகிறார்கள்.

- க.ஜீவா, சித்தோடு.

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  டாக்டர் சவுண்டப்பன் எழுதிய `மூளை A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில்

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.