Published:Updated:

`நிதி ஒதுக்காவிட்டால் எமெர்ஜென்சி தான் வழி' - முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முடங்கிய அமெரிக்க அரசு!

`நிதி ஒதுக்காவிட்டால் எமெர்ஜென்சி தான் வழி' - முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முடங்கிய அமெரிக்க அரசு!
News

அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லைப் பகுதியில், பாதுகாப்பு காரணத்துக்காக சுவர் எழுப்பத் திட்டமிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த திட்டத்துக்கு 40,000 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. அதற்கு செனட் சபை ஒப்புதல் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் ட்ரம்ப். `இந்த வேண்டுகோளை நிறைவேற்றாவிட்டால், அமெரிக்க அரசாங்கம் காலவரையின்றி மூடப்படும் (கவர்மெண்ட் ஷட் டவுன்) என்றும், எட்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கட்டாய விடுமுறையில் இருக்க வேண்டும் அல்லது ஊதியமில்லாமல் வேலை செய்ய உத்தரவிடப்படும்' எனவும் எச்சரித்திருந்தார். 

அவரின் வேண்டுகோளை செனட் சபை மறுக்கவே, கடந்த 22-ம் தேதி முதல் அரசாங்கம் முடக்கப்பட்டுள்ளது. பல முக்கிய துறைகள் முடங்கியுள்ளதால், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சுவர் தொடர்பாக ஜனநாயக கட்சியினருடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், "எல்லையில் சுவர்கட்டுவதற்காவும், நாட்டைப் பாதுகாக்கவும் தான் நாங்கள் இந்த விஷயத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்காக மாதங்கள் அல்ல... வருடக்கணக்கில் கூட அரசு அலுவல்களை முடக்குவோம்" என்று ட்ரம்ப் கூறினார்.

இதற்கிடையே, நேற்று மீண்டும் ஜனநாயக கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ட்ரம்ப்பிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்குப் பதிலளித்த அவர், `` எல்லைச் சுவர் எழுப்புவதற்கு எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவேன். 

அவசர நிலையைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கினால் எல்லைச் சுவரை விரைந்து கட்ட முடியும். ஷட் டவுன் போராட்டம் மேலும் நீட்டித்தால் இவ்வாறு செய்ய வாய்ப்புள்ளது. இத்திட்டத்தை அடைவதற்கான மற்றொரு வழி எமெர்ஜென்சி. ஷட் டவுன் போராட்டத்தை அரசு முடக்கம் என நான் கூறமாட்டேன். நாட்டின் நலனுக்காக, பாதுகாப்புக்காகச் செய்ய வேண்டிய ஒன்று தான் இது. நான் செய்து வருவதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அரசு முடங்கியுள்ளது இது முதல் முறையல்ல. 1995-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 20 நாட்களுக்கு மேலாக அரசு முடங்கியது. இதேபோல் 2013-ஆம் ஆண்டு 15 நாட்களுக்கு மேலாக முடங்கியிருந்தது. கடந்த 13 நாட்களாக முடங்கியுள்ள அரசு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாததால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.