
ஆஹான்


Sunder rajan
சூழலியல் நீதியை உள்ளடக்கியதுதான் சமூகநீதி. காற்று மாசால் டெல்லிவாசிகளின் ஆயுள் பத்தாண்டுகள் குறைவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற பகுதி மக்களின் ஆயுளில், நான்கரை ஆண்டுகள் குறைகின்றன. கடந்த ஆண்டு 12.4 லட்சம் இந்திய மக்கள் காற்று மாசால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. காற்று மாசைக் கவனிக்காமல் விடுவது, நீதியை மறுப்பதற்குச் சமம்; சூழலியல் நீதியை உள்ளடக்கியதுதான் சமூகநீதி என்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். வசதியுள்ளவர்கள காற்று மாசிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகளை வாங்கிக்கொள்ளலாம். ஏழைகள் என்ன செய்வார்கள்?
Aruldoss borntowin
பட்டியலின மக்கள் ரெண்டுபட்டால் பாசிச அரசுக்கும், ஆதிக்கக் கும்பலுக்கும்தான் கொண்டாட்டம். பா.இரஞ்சித் பேச்சை, அந்தக் கூட்டத்தில் இருந்த நானும் கவனித்தேன். ‘பட்டியலின மக்கள் கொலை செய்யப்படுவதையும், ஆணவக் கொலைகள் நடப்பதையும் பெரிய கட்சிகள் போராட்டமாக நடத்துவதில்லை’ என்று பேசினார். பெரிய அரசியல் கட்சிகளில் தனித் தொகுதியில் நின்று போட்டியிட்டு, 46 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் வாய் திறந்து பேச முடியவில்லை என்றால், அவர்களைத் தடுப்பது அந்தக் கட்சிகள் தானே? யோசிக்க வேண்டிய கருத்து இது.


Kotravai N
பட்டியலின மக்களுக்கான பிரதிநிதிகள் கூட்டணி என்றால் மற்ற சாதி தொழிலாளர்களுக்காகவும், விவசாயக் கூலிகளுக்காகவும், இவர்களை எல்லாம்விட கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அனைத்து சாதிப் பெண்களுக்காகவும் எப்படி தொகுதிகளைப் பிரிக்கலாம், கூட்டணி வைக்கலாம் என்பதையும் கேள்வியாக வைக்க வேண்டியுள்ளது. நாம் வெறும் சாதி மட்டுமல்ல... வர்க்கமும்கூட. அதுவே அடிப்படை. திராவிட அரசியலின் போதாமைக்கு மாற்று, தலித்திய அரசியல் அல்ல. பாட்டாளி வர்க்க அரசியல் தலைமை அமைத்தலே சரியான மாற்று. விலக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் அதே அடையாளத்தின் கீழ் மீண்டும் மீண்டும் சிதறுண்டு போதல் நம்மை மேலும் பலவீனப்படுத்தும்.
Arun Bhagath
ஒவ்வொரு சாதிக்கும் தனி டி.என்.ஏ உள்ளது - மாஃபா பாண்டியராஜன்.
# கறுப்பர், ஆசியர், வெள்ளையர், மங்கோலியர் எல்லோரும் ஒற்றை ஆப்பிரிக்க டி.என்.ஏ-வின் கிளைகளே. நம் எல்லோரின் பாட்டி, ஆப்பிரிக்காவின் முப்பாட்டிதான்!
Suresh Kannan
‘பேட்ட’ இசை வெளியீட்டு விழாக் காட்சிகள் பார்த்தேன். ஒருவரை அமர்த்தி வைத்து, திகட்ட திகட்டப் புகழ்ந்து கொண்டேயிருப்பது தமிழின் மோசமான கலாசாரம். மன்னர் காலத்தின் எச்சங்கள் இன்னமும் பலமாக வேரூன்றியிருக்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இந்தக் கலாசாரத்தை இன்னமும் மோசமாக்கினார்கள். ‘ஆன்மிக’ ரஜினியும் இந்த வரிசையில் நிற்கிறார்!

Siva Anandhan
தமிழகத்தில், எப்போதாவது புயல் தாக்குகிற காலம் போய்விட்டது. தானே, வர்தா, கஜா என சில ஆண்டுகளுக்குள்ளாகவே புயல்கள் சுழன்றடிக்கின்றன. புயல் உணர்த்திய முக்கியப் பாடம், மின்சாரம் மற்றும் ஓலைக்கூரைகளால் ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்பு. நிலத்தடி மின்வடம், மின் சீரமைப்பு விரைவாக முடிய உதவி செய்யும். வீட்டுக்கு இரண்டரை லட்சம் பிரதமர் நிதியில் இருந்து தருவதாக அறிவித்த பின்பு இப்போது பலரும் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழகத்தில் ஓலைக் கூரைவீடுகளே இருந்திருக்காது.

shivaas_twitz
சிலை வைக்கிற அளவுக்குப் பெரிய ஆளாகிட்டோம்னா, உசுரோட இருக்கும்போதே நம்ம சிலையை நல்லபடியா செஞ்சி வெச்சிடணும். இல்லேன்னா செத்ததுக்கு அப்புறம் வஞ்சம் தீர்ப்பானுங்க..!
Jayaguru05
ஸ்டாலின் பெங்களூரில் போராடாமல் திருச்சியில் கொடி பிடிப்பது ஏன்? - பொன்னார்
# ஏனுங்க கேரளாவுல அவமானப் படுத்துனதுக்கு கன்னியாகுமரியில எதுக்கு பந்த் நடத்துனீங்க?
anand07_sri
13 பேரைச் சுட்டுக்கொன்றபிறகும் அந்த ஆலையைத் திறக்க முயற்சி நடக்கிறது என்றால், தமிழர்கள் மேல் தொடுக்கும் பனிப்போர் என்பேன்.
akku_twitz
83-வது முறையாக சென்னை விமான நிலையக் கண்ணாடி விழுந்து நொறுங்கியது - செய்தி
# யாருதான்யா சென்னை விமான நிலைய எஞ்சினீயரு... எனக்கே அவனப் பாக்கனும்போல இருக்குய்யா!
yugarajesh2
பெட்ரோல் விலை குறைப்பில் மோடியின் பங்கு உள்ளது - தமிழிசை
# பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் மோடிக்குப் பங்கு இல்லைன்னு சொன்னிங்களே மேடம்!

suyanalavaathi
அ.தி.மு.க-வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு - செய்தி
# காமெடிக்கு ஒரு கை குறையுது போல!