சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

வாவ்... வாழ்த்து அட்டை!

வாவ்... வாழ்த்து அட்டை!
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ்... வாழ்த்து அட்டை!

வாவ்... வாழ்த்து அட்டை!

ஹாய்  ஃப்ரெண்ட்ஸ்... இந்தப் புத்தாண்டுக்கு உங்க நண்பர்களுக்கு உங்க கைவண்ணத்தில் ஒரு வாழ்த்து அட்டையைச் செய்வோமா? சொல்லிக்கொடுக்கிறார், `சாய் கிரியேஷன்’ உரிமையாளர், சோபனா. ஆர் யூ ரெடி?

வாவ்... வாழ்த்து அட்டை!

தேவையானவை:

*சார்ட் - 2 (வெள்ளை, மஞ்சள் நிறங்களில்)

*கலர் பேப்பர் - ஒன்று (ஊதா நிறத்தில் )

*பொம்மைகளில் வைக்கும் கண்கள் - 4

*நூல்கண்டு - ஒன்று (விரும்பும் நிறத்தில்)

*பெயின்ட் - கறுப்பு நிறம் கிளிட்டர் நட்சத்திரங்கள் கத்தரிக்கோல், ஃபெவிக்கால், பிரெஷ் ஸ்கேல்

செய்முறை :

வாவ்... வாழ்த்து அட்டை!ஸ்டெப் 1

மஞ்சள் நிற சார்ட்டில், பலூன் மற்றும் மினியான் உடல் வடிவில், பென்சிலால் வரைந்துகொள்ளவும்.

ஸ்டெப் 2

பென்சிலில் வரைந்த உருவத்தை, கத்தரிக்கோலைப் பயன்படுத்தி தனியே வெட்டி எடுக்கவும்.

ஸ்டெப் 3

ஊதா நிற கலர் பேப்பரில் மினியானுக்கான ஆடைகளை வரைந்து, வெட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் 4


வாழ்த்து அட்டையின் வெளிப்புறத்துக்கான உருவங்கள் தயார்.

ஸ்டெப் 5

மஞ்சள் நிற மினியான் உருவம் மீது, ஊதா நிற ஆடையைப் படத்தில் காட்டியபடி ஒட்டவும்.

ஸ்டெப் 6

மினியானுக்குக் கண்கள் ஒட்டி, கை மற்றும் கால்களை பெயின்ட்டால் வரைந்து கொள்ளவும்.

ஸ்டெப் 7

பலூன் வடிவத்தில் வெட்டிய உருவத்தில், கிளிட்டர் ஸ்டார்கள் ஒட்டி அலங்கரிக்கவும்.

ஸ்டெப் 8

வெள்ளை நிற சார்ட்டை A4 பேப்பர் அளவுக்கு எடுத்து, படத்தில் காட்டியபடி இரண்டாக மடித்துக்கொள்ளவும்.

வாவ்... வாழ்த்து அட்டை!

ஸ்டெப் 9

மஞ்சள் நிற சார்ட்டைப் பயன்படுத்தி, செய்துவைத்துள்ள மினியான், பலூன் உருவங்களை வெள்ளை நிற சார்ட்டில், படத்தில் காட்டியபடி ஒட்டவும்.

ஸ்டெப் 10

மினியான், பலூன்களைப் பிடித்துக்கொண்டிருப்பது போல, பென்சிலால் வரைந்துகொள்ளவும்.

ஸ்டெப் 11

மஞ்சள் நிற சார்ட்டினை மெல்லியதாக கத்தரித்து, வெள்ளை நிற சார்ட்டின் நான்கு மூலைகளிலும் பார்டராக ஒட்டவும்.

ஸ்டெப் 12

வாழ்த்து அட்டையின் அவுட் லுக் தயார்.

ஸ்டெப் 13


மஞ்சள் நிற சார்ட்டினைப் பயன்படுத்தி, அட்டையின் உள்பகுதியில் ஒட்டுவதற்கான யானை, சூரியன் போன்ற பிடித்த உருவங்களை வரைந்து, வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 14

வெட்டி எடுத்த உருவங்களை, அட்டையின் உள்பகுதியில் ஒட்டி, கலர் பட்டன்களால் அலங்கரிக்கவும்.

ஸ்டெப் 15

புத்தாண்டு வாழ்த்து எழுதி, நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கவும்!

சு.சூர்யா கோமதி - பா.காளிமுத்து