சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

3.0 சாண்டாகிளாஸ்

3.0 சாண்டாகிளாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
3.0 சாண்டாகிளாஸ்

3.0 சாண்டாகிளாஸ்

‘ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் பெல்ஸ்...’ என்ற இசை ஒலிக்க, 3.0 கிறிஸ்துமஸ் தாத்தாக்களும், வெண்மேகத்தையே ஆடையாக அணிந்து, பட்டாம்பூச்சி சிறகுகளுடன் குட்டி தேவதைகளும் திரும்பிய பக்கம் எல்லாம் நிறைந்திருந்தனர்.

3.0 சாண்டாகிளாஸ்

சென்னை, மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா, இணைப்புப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில்தான் இந்த ஃபேன்டசி உலகம் கண்கொள்ளா காட்சியாக மனதை நிறைத்தது.

பள்ளியின் துணைமுதல்வர் ஆ. ஜாஸ்லின் பெஸிலா தலைமையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், இமான் அண்ணாச்சி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

3.0 சாண்டாகிளாஸ்

நடனம், கிறிஸ்து நாடகம் எனக் கலக்கினர் சுட்டீஸ். அதைத்தொடர்ந்து சுட்டிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

‘‘புள்ளைகளா சாப்டீங்களா? இவ்வளவு குழந்தைகளை ஒரே இடத்துல பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம இப்போ ஒரு வெளையாட்டு வெளையாடுவோமா?’’ என்ற இமான் அண்ணாச்சி, ‘மல மேல மல, மலயில உரலு, உருளுது புரளுது’ என்று கலகலப்பாக ஆரம்பிக்க,  அத்தனை கிறிஸ்துமஸ் குட்டித் தாத்தாக்களும் தேவதைகளும் திருப்பிச் சொல்லி சிரித்து, நிகழ்ச்சியை நிறைவாக்கினர்.

ச.ராம் சங்கர் - படங்கள்: பெ.ராக்கேஷ்