
ஸ்ரீபோஸ்ட்

`யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ என்பதைபோல் ‘பொதுஅறிவு புதிர்ப்போட்டி’யின் பரிசு, இதழில் வெற்றி பட்டியல் வருவதற்கு முன்பே என் இல்லம்தேடி வந்துவிட்டது. நன்றி.
- கே.பி.ஜெயந்தி, மதுரை-1; எஸ்.மலர்விழி கோவிந்தசாமி, ஊத்தங்கரை
சங்கீத கலாநிதி, கலைநாயகி அருணா சாய்ராமின் பேட்டி, சங்கீத சீசனுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
- விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை-87; அ.யாழினி பர்வதம், சென்னை-78; மயிலை கோபி, ஆனைகுப்பம்; உமா மோகன்தாஸ், திண்டுக்கல்; ச.லெட்சுமி, செங்கோட்டை
குழந்தையின்மை என்பது ஒரு பெரிய குறையல்ல என்பதை நறுக்கென கூறியது `நமக்குள்ளே’.
- வசந்தி மதிவாணன், ஓசூர்; லட்சுமி வாசன், சென்னை-33; உஷா முத்துராமன், மதுரை-6; மீனா முருகேசன், தஞ்சாவூர்; கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்; கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன் புதூர்; ஆர்.லட்சுமி, மதுரை-16; மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்; என்.சாந்தினி, மதுரை-9
‘நேசக்காரி’ கோமதியின் பணி அசாதாரணமானது. தொடரட்டும் இந்தப் பகுதியும் அவர் பணியும்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்; வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18; எம்.திவ்யா, கும்பகோணம்
‘என் காதல் சொல்ல வந்தேன்’ - அதுல்யா ரவியின் இளமை நினைவுகள்... யாராலும் மறக்க முடியாதவை!
- இல.இரவி, செ.புதூர்; சி.கார்த்திகேயன், சாத்தூர்; கே.ஆர்.உதயகுமார், சென்னை-1; மீனா முருகன், கீழவாசல்
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது `ஓ பாப்பா லாலி’.
- எஃப்.முர்சிதா, காயல்பட்டினம்; மேகலா மாணிக்கம், சென்னை-78; ஆர்.பிருந்தா இரமணி, மதுரை-9; எம்.ஃபாரூக், திருச்சி-8; அ.சந்திரலேகா, மதுரை-3; ஜி.பிரேமா, சென்னை-44
பார்த்தவுடனேயே எடுத்துச் சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும் பேரீச்சையில் 30 வகை ரெசிப்பிகளைத் தந்து அசத்துவிட்டீர்கள்!
- செல்வி வி.தீட்சணா, சென்னை-41; டி.எம்.விஸ்வதா, திண்டுக்கல்; என்.கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-97; ராஜி குருசுவாமி, சென்னை-88