Published:Updated:

சத்தியமா நம்புங்கள்... பத்மஸ்ரீதான்!

சத்தியமா நம்புங்கள்... பத்மஸ்ரீதான்!
News
சத்தியமா நம்புங்கள்... பத்மஸ்ரீதான்!

டீ ஆற்றிக்கொண்டிருந்த பிராகாஷ் ராவ் பத்ம விருது பெற்றுள்ளார்.

Published:Updated:

சத்தியமா நம்புங்கள்... பத்மஸ்ரீதான்!

டீ ஆற்றிக்கொண்டிருந்த பிராகாஷ் ராவ் பத்ம விருது பெற்றுள்ளார்.

சத்தியமா நம்புங்கள்... பத்மஸ்ரீதான்!
News
சத்தியமா நம்புங்கள்... பத்மஸ்ரீதான்!

சாதாரணப்பட்ட மக்களுக்கும் பத்ம விருதுகள் சாத்தியப்பட்டுள்ளன. அதில், தேவராப்பள்ளி பிரகாஷ் ராவும் ஒருவர். ஒடிஷா தலைநகரம் கட்டாக் சென்றால் பிச்சியான பக்ஸி பஜாரிர் பிரகாஷ் ராவ் டீ ஆற்றிக்கொண்டிருப்பார். இந்த டீக்கடைதான் பிரகாஷ் ராவுக்கு வாழ்வாதாரம். ஆனால், டீக்கடை வருமானத்தில் இருந்து பிரகாஷ் ராவ் பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வருகிறார்.

அதன் பெயர் `ஆஷா அஸ்வானா.’ மூன்றாம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில் 70 குழந்தைகள் படித்து வருகின்றனர். சமூகத்தின் அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவை இந்தக் குழந்தைகள். டீக்கடையில் தினமும் பிரகாஷ் ராவுக்கு ரூ. 600 வருவாய் கிடைக்கிறது. அதில், ரூ.300 பள்ளிக்காக எடுத்து வைக்கிறார். 

பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். காலையில் குழந்தைகளுக்குப் பால் பிஸ்கட் மதியம் அரிசி சாதம், பருப்பு வழங்கப்படுகிறது. பிரகாஷின் சேவையை அறிந்தவர்கள் அவருக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டல் கனடாவின் எவாலினா ஆகியோர் இந்தியா வந்தால் இங்கு குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். 

பிரகாஷ் ராவ் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தந்தை இறந்தார். வறுமை காரணமாகப் படிப்பை கைவிட்டு தந்தை நடத்தி வந்த டீக்கடையை ஏற்று நடத்தினார். பொழுதுபோக்குபோல ரத்ததானமும் செய்வார். 1978- ம் ஆண்டு முதல் தற்போது வரை 217 முறை ரத்ததானம் செய்துள்ளார் இந்த 59 வயது இளைஞர். 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி, கட்டாக் வந்தபோது பிரகாஷ் ராவின் சேவை குறித்து தன் பேச்சினூடே குறிப்பிட்டார். பிரதமர் தன் `மன் கி பாத்’ உரையின்போதும் பிரகாஷ் ராவைப் பாராட்டியுள்ளார்.

பிரதமரிடமிருந்து பாராட்டு கிடைத்ததை பிரகாஷ் ராவ் பெருமையாகக் கருதுகிறார். ``நம் கடமையை  சரியாகச் செய்துகொண்டிருந்தாலே போதும் உலகம் நம்மை கவனிக்கத் தொடங்கும்’’ என்று கூறும் பிராகாஷ் ராவுக்கு 8 மொழிகள் அத்துப்படி.