கட்டுரைகள்
Published:Updated:

உயர்ந்த காபி

உயர்ந்த காபி
பிரீமியம் ஸ்டோரி
News
உயர்ந்த காபி

உயர்ந்த காபி

உயர்ந்த காபி

லகின் விலை அதிகமான காபி எங்கே விற்கும் என்று கேட்டால் என்ன சொல்வீங்க? அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் விற்பாங்க என்பீர்கள். ஆனால், நம்ம நாட்டில், நமக்குப் பக்கத்தில் உள்ள கேரளாவில் ஒரு கப் காபியின் விலை 1600 ரூபாய் எனச் சொன்னால் நம்புவீங்களா?

கேரள மாநிலம், கொச்சியில் பனம்பள்ளி நகர் என்ற இடத்தில் உள்ளது, கோபி லுவாக் (kopi luwak) என்ற காபி ஷாப். இங்கேதான் ஒரு கப் 1600 ரூபாய்.

உயர்ந்த காபி

காபியின் விலை இவ்வளவு என்றால், அந்த காபி கொட்டையின் விலை எவ்வளவு இருக்கும்? ஒரு கிலோ 45 லட்சம். இவ்வளவு விலை உயர்ந்த காபி கொட்டை எப்படி உருவாகிறது தெரியுமா? 

உயர்ந்த காபி

புனுகுப்பூனைச் சாப்பிட்டு எச்சமாகப் போடும் காபி விதைகளே, கோபி லுவாக் (Kopi Luwak) என்று அழைக்கப்படுகின்றன. காபி விதைகளை இது மேம்படுத்துகிறது என்கிறார்கள். ஆனால், ‘இதற்காக அந்த உயிரினத்தைக் கூண்டில் அடைத்து, அவற்றின் இயற்கையான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதனால், இந்தப் பூனைகள் சீக்கிரமே இறந்துவிடுகின்றன’ என்று வருந்துகிறார்கள் உயிரின ஆர்வலர்கள்.

உயர்ந்த காபி

ஆ.கிருஷ்ணவேணி சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை-600 015