
ஷார்ட், ஸ்மார்ட் இயக்குநர்கள்!


தொழில்நுட்பம் வளர வளர அதில் சீக்கிரமே அப்டேட் ஆகறது சுட்டிகளும்தாம். வாய் மொழியாக கதைச் சொல்வதிலிருந்து, சுட்டிகளே இயக்கி வெளியிடும் குறும்படங்கள், யூடியூப்பில் கலக்கிட்டு இருக்கு. அப்படி நான் ரசிச்ச ரெண்டு தமிழ்க் குறும்படங்கள் இவை...

‘Independence for sale’
ஒரு பொருளின் மதிப்பு எவ்வளவு முக்கியமானது, அதை வீணாக்காமல் எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை வித்தியாசமாக, ஜாலியாக சொல்லியிருக்கும் குறும்படம் இது. சென்னை, தாம்பரம் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் படிக்கும் 10 வயது ஹிரன்மயா என்ற சிறுமி இயக்கி இருக்கார்.

முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சிறுவனை, கீழே இருக்கும் பொருள்களை பொறுக்கிட்டே இருப்பவன் என்று மற்ற மாணவர்கள் கிண்டல் செய்யறாங்க. அவன் என்ன எடுக்கிறான். அதை என்ன செய்யறான் எனத் தெரியவரும்போது, ‘அட’ என ஆச்சர்யப்பட்டு சல்யூட் போடவைக்கிறார் ஹிரன்மயா. இந்தப் படத்தைக் காண...



இயற்கை!
சூழ்நிலை மாசு மற்றும் துரித உணவு கலாசாரம் இரண்டையும் அதிக வசனம் இல்லாமல், காட்சிகள் மூலமே சொல்லியிருக்கார், நெய்வேலியைச் சேர்ந்த 14 வயது சூரியநாராயணன். ஒரே ஒரு கேரக்டர்தான். எடிட்டிங், கிராபிக்ஸ், திரைக்கதை, வசனம் என அனைத்தையும் தனி நபராக அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 10 குறும்படங்களை இயக்கியவர். நெய்வேலி புத்தகக் கண்காட்சி (NLC) மற்றும் குறும்பட விழாவில் பரிசு பெற்றிருக்கிறார். எடிட்டர் கர் பிரசாத்திடம் உதவியாளராக 15 நாள்கள் பயிற்சியும் பெற்றிருக்கிறாராம் சூரியநாராயணன். இந்தப் படத்தைக் காண...
https://bit.ly/2tVbZ7t