கட்டுரைகள்
Published:Updated:

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

“இந்தியா பசுமை நிறைந்த நாடாக மாறணும். அதுக்கு எங்களால் முடிஞ்ச சின்ன பங்களிப்பு இந்த விதைப்பந்து தயாரிப்பு” எனப் பக்குவம் நிறைந்த குரலில் பேசுகிறார்கள் ரங்கேஷ்வேல் மற்றும் ஸ்வர்ணம்பிகா.

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

மூன்றாம் வகுப்புப் படிக்கும் இரட்டையர்களான இவர்கள், ஆமணக்கு, புங்கை, வேம்பு போன்ற மரங்களுக்கான விதைப்பந்துகள் தயார்செய்து, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்கள்.

‘‘நாங்க ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது, ஸ்கூலில் மரம் வளர்க்கும் போட்டி நடத்தினாங்க. மிஸ் கொடுக்கும் விதைகளைக் வீட்டில் நட்டுவெச்சு செடியா வளர்க்கணும். ஒரு மாசம் கழிச்சு யாரோட செடி நல்லா வளர்ந்திருக்கோ, அவங்களுக்கு பரிசு கொடுப்பாங்க. அந்தப் பரிசை நாங்க வாங்கினோம். அதுதான் ஆரம்பம்’’ என ரங்கேஷ்வேல் சொல்ல, தொடர்கிறார் ஸ்வர்ணம்பிகா.

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

“எங்களுக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியைச் சேமித்து, நர்சரியிலிருந்து விதைகள், செடிகள், உரம்னு வாங்கிட்டு வருவோம். பழைய வாட்டர் பாட்டில்கள், டப்பாக்களில் வளர்க்க ஆரம்பிச்சோம். எங்க

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

ஆர்வத்தைப் பார்த்துட்டு மண் தொட்டிகளை அம்மா வாங்கிக்கொடுத்தாங்க. பூச்செடிகள், காய்கறிச் செடிகள்னு வீட்ல வளர்க்க ஆரம்பிச்சோம். நாங்கள் வளர்த்த செடியில் பூக்கும் பூக்களைப் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கும். எங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் கொடுப்போம்’’ என குஷியாகிறார் ஸ்வர்ணம்பிகா.

 “இவங்க ஈடுபாடு புரிஞ்சதும், செடி வளர்ப்பது சம்பந்தமான தகவல்களை இணையத்தில் தேடிப் பிடிச்சு சொன்னேன். அடுத்தகட்டமா, விடுமுறை நாள்களில் தெருக்களில் கன்றுகள் நட்டு மரம் வளர்க்க ஆரம்பிச்சாங்க. ‘நாம மட்டும் வளர்த்தா கொஞ்சம் மரம்தான் வளர்க்க முடியும். நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கும் மரக்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லுவோமா?’னு ரங்கேஷ்வேல் கேட்டான். அதுக்கு நிறைய பணம் தேவை. இதுக்கு மாற்றுவழியை யோசிச்சப்போதான் விதைப்பந்துகள் தயாரிப்பு பற்றிக் கேள்விப்பட்டோம்” என்கிறார் அம்மா வசந்தா கெளரி.

விதைப்பந்துகளால் வளமாக்குவோம்!

“அரையாண்டு விடுமுறையில் இயற்கை விவசாயி அய்யா ஒருத்தர்கிட்ட போய் விதைப்பந்துகள் தயாரிக்கக் கற்றுக்கொண்டோம். புங்கை, வேம்பு, ஆமணக்கு போன்ற விதைகளை விதைப்பந்துகளாகத் தயார்செய்து, எங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் கொடுத்து, சுற்றுப்புறத்தில் போட்டோம். அவங்க கொடுத்த ஊக்கத்தால், அடுத்தகட்டமா அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் விதைப்பந்துகளைக் கொடுத்தோம்’’ என்கிறார் ரங்கேஷ்வேல்.

‘‘ஆயிரக்கணக்கில் விதைப்பந்துகள் தயாரிக்கும்போது, உரம் மற்றும் விதை வாங்க அதிகம் பணம் தேவைப்படும். அதுக்காக, சில இடங்களில் ஸ்டால்கள் அமைச்சு எங்க விதைப்பந்துகளை விற்கிறோம். அதில் கிடைக்கும் பணத்தில், விதைப்பந்துகள் தயார்செய்து, பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம். இலவசமா விதைப்பந்துகள் தயாரிப்புப் பயிற்சிகளும் கொடுக்கிறோம்’’ எனப் புன்னகைக்கிறார் ஸ்வர்ணம்பிகா.

வளர்ச்சி!

-சு.சூர்யா கோமதி

படங்கள்: வீ.நாகமணி