கட்டுரைகள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

கறிவேப்பிலை

ணவின் நறுமணத்துக்காகவே கறுவேப்பிலையைச் சேர்க்கிறோம் என நினைத்தால் அது தவறு. இதில், பல மருத்துவக்குணங்கள் உள்ளன. ‘கறிவேம்பு இலை’ என்ற சொல்லே, கறிவேப்பிலை என்றானது. இதில், இரும்புச்சத்தும் போலிக் அமிலமும் உள்ளன. எலும்புகளை வலுவாக்க, ரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்க, புற்றுநோய்த் தடுப்பு எனப் பலவற்றுக்கு கறிவேப்பிலை நல்ல தீர்வு.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

யானைகளுக்கு ஸ்பா

கேரள மாநிலத்தில் யானைகளுக்கான ‘ஸ்பா’ புகழ்பெற்றது. ஒவ்வோர் ஆண்டும், ஜூலை மாதத்தில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப்படும். ஜாலியான குளியல், ஆயுர்வேத சிகிச்சை, ஊட்டச்சத்தான உணவு என  இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் யானைகளுக்குச் செல்லமோ செல்லம் கொடுக்கப்படும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வண்ணத் தேநீர்

ங்காளதேஷ் நாட்டின் மௌல்வி பஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ரோமேஷ் ராம் கௌர். இவர், 7 வண்ணங்களில் வெவ்வேறு சுவை அளிக்கும் தேநீர் தயாரிப்பதில் பிரபலமானவர். இந்தத் தேநீரை சுற்றியுள்ள ஊர்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் தேடிவந்து சுவைப்பார்கள். இதனால், மௌல்வி பஜார் மாவட்டத்தை ‘தேநீர்களின் தலைநகர்’ என்று அழைக்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

புகழுக்குரிய நூலகங்கள்

சியாவிலேயே மிகப் பழைமையான நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குள்ளன.

*உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம், கன்னிமரா நூலகம். சென்னை, எழும்பூரில் அமைந்துள்ளது.

*இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம், திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.

*கொல்கத்தாவில் 1836-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953-ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே, இந்தியாவின் மிகப்பெரிய நூலகம். இது, ஆவணக் காப்பகமாகவும் நிகழ்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

மூக்கு கிளிப்

ல் சீரமைப்பு சிகிச்சையில், கிளிப் மாட்டிக்கொள்வது போன்று, ஜப்பானில் மூக்கு கிளிப் சிகிச்சை பிரபலம். ஜப்பானியர்களுக்கு மூக்கு அழுந்திய நிலையில் இருப்பதால், பலரும் மூக்கைப் புடைப்பாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள்.  எந்த அளவுக்கு மூக்கை உயர்த்த வேண்டுமோ, அதற்கேற்ப பலவிதமான கிளிப்புகள் பயன்பாட்டில் உள்ளன.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கில்லாடி ரோபோ

குழந்தைகளிடம் கொஞ்சி, விளையாட்டின் மூலம் கற்பிக்கும் ‘மிகோ’ என்ற ரோபோவை, ஓராண்டுக்கு முன்பு ‘எமோடிக்ஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது, ‘மிகோ2’ என்ற பெயரில் புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பது, பேசுவது, முகங்களை அடையாளம் காண்பது எனப் பல விஷயங்களில் அசத்துகிறது, இந்த ரோபோ. பொதுஅறிவு, பள்ளிப் பாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு உதவியாக இருக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

நெட்டி

நெட்டி முறிக்கும்போது சத்தம் வருவது எப்படித் தெரியுமா? மூட்டுக்குள் இருக்கும் எலும்புகள், ஒன்றுடன் ஒன்று உராயாமல் சுலபமாக அசைவதற்காக, அங்கே சிறிது திரவம் இருக்கும். அதை  Synovial fluid என்பார்கள். நெட்டி முறிக்கையில், எலும்புகளின் இணைப்பு பகுதியின் மேற்பரப்புகள் சற்று விலகி, அங்கே திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். அதன் நீர்குமிழிகள் உடையும் சத்தமே, நெட்டி முறிவது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

உயரமான மரம்!

லிபோர்னியாவின் ஹம்போஸ்ட் ரெட்வுட்ஸ் அரசுப் பூங்காவில் இருக்கும் ஸ்ட்ராட்டோஸ்பியர் ஜயன்ட் (Stratosphere Giant Tree) என்ற மரமே, உலகின் மிக உயரமான மரம். இதன் உயரம், 112.32 மீட்டர். ரெட்வுட்ஸ் பூங்காவின் ராக்பெல்லர் காட்டில் உள்ள இது, நியூயார்க்கில் உள்ள சுதந்திரச் சிலையைவிட 3 மடங்கு அதிகம் உயரமானது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

மைக்ரோசிப் பள்ளிச் சீருடை

சீனாவின் தென்பகுதியில் குயிஷூ மற்றும் குயான்சி மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளின் சீருடைகளில் மைக்ரோசிப்கள் பொருத்தப்படுகின்றன. குழந்தைகள் பள்ளியில் நுழைந்ததுமே, அது கண்காணிக்க ஆரம்பித்துவிடும். பெற்றோரும் வீட்டில் இருந்தபடியே தங்களின் குழந்தைகள் பள்ளியில் இருப்பதை செல்போன் மூலம் அறிந்துகொள்ளாலாம். இதற்கு, சீனாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.