கட்டுரைகள்
Published:Updated:

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

ன்புச் சுட்டி நண்பர்களே...

வணக்கம்.

ஆண்டுத் தேர்வு என்ற பரபரப்பான கட்டத்தில் இருக்கிறீர்களா? திரும்பிய பக்கமெல்லாம் `படி படி... இன்னும் படி' என்ற வார்த்தையே ஒலிக்கிறதா? படியுங்கள்... ஆனால், பரபரப்பாகவோ, பதற்றமாகவோ படிக்காதீர்கள்.  இயல்பாக, இனிதாக விஷயங்களை உள்வாங்கிப் படியுங்கள்.

`நாம் போருக்குப் போகவில்லை. ஆண்டு முழுவதும் படித்ததை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறோம்  என்பதை அறிவதற்காகவே தேர்வு எழுதப்போகிறோம்' என்ற எண்ணத்துடன் தயாராகுங்கள். அதை உங்களுக்குச் சொல்வதுதான் இந்த இணைப்பிதழ். ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் செயல்படும் மருத்துவர்கள், நிபுணர்களின் அக்கறையான வார்த்தைகளில் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான், எந்த வெற்றியையும் அடையமுடியும். அடைந்த வெற்றியைக் கொண்டாட முடியும். காலையில் கண் விழிப்பதில் தொடங்கி, உணவு, உடற்பயிற்சி, மனநலம், ஒவ்வொரு  பாடப்பிரிவுக்குமான தனித்துவ விஷயங்கள் என்று கவனித்து உருவாக்கியிருக்கிறோம்.

படித்து மனதில் ஏற்றுங்கள்; தேர்வு என்ற நண்பனை புன்னகையுடன் சந்தியுங்கள்.

வெற்றிக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
ஆசிரியர்

உடலும் மனமும்!

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

தேர்வு நெருங்க நெருங்க, `படிச்ச கேள்வி வரலைன்னா என்ன பண்றது?', `மார்க் குறைஞ்சுட்டா என்ன பண்றது?' போன்ற பயங்கள் ஆரம்பிச்சுடும். முதல்ல, இந்தப் பயத்தைத் தூக்கி தூரமா போடுங்க. இந்த நேரத்தில் மனம் சார்ந்தும், உடல் ரீதியாகவும் எதிலெல்லாம் கவனமா இருக்கணும்னு தெரிஞ்சுக்கலாம்!

• செல்போன் மற்றும் டி.வி-க்கு லாங் லீவு விட்டுருங்க. `ரொம்ப நேரம் படிச்சுட்டே இருக்கேனே... ரிலாக்ஸ் வேண்டாமா' என்கிறீர்களா? கொஞ்ச நேரம் ரேடியோவில் பாட்டு கேளுங்க. அம்மா அப்பாவுடன் இனிய விஷயங்களைப் பேசுங்க.

• செல்போன் பயன்படுத்துவதும், டி.வி பார்ப்பதும் மன அமைதியை மட்டுமல்லாமல், அதிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், கண் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். தேர்வு நேரத்தில் இரண்டுக்கும் ஸ்ட்ரிக்ட்டாக `நோ' சொல்லிடுங்க.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• படிக்கும்போது, மனம் புத்துணர்ச்சியோடு இருக்கறது அவசியம். அதனால், தேவையில்லாத பயத்தை ஒதுக்கிவிட்டு, தெளிவான மனநிலையுடன் படிக்க உட்காருங்க. நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் படித்தால், சோர்வு ஏற்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் ஓய்வு எடுங்க.

• படிப்பதற்காக, `ஸ்டடி ரூம்' ஒன்றை ஏற்படுத்திக்கங்க. அந்த அறையில், டிஜிட்டல் சாதனங்கள் எதுவும் இருக்கக் கூடாது. காற்றோட்டமான, படிக்க ஏதுவான இடமாக இருக்கணும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

ஸ்டடி ரூமில் படிக்கத் தேர்ந்தெடுக்கும் பகுதி, ஜன்னலின் அருகே இருப்பது சிறப்பு. ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கிற மாதிரி உட்கார்ந்தால், கவனச்சிதறல் வரும். அதனால், ஜன்னலுக்கு எதிர்ப்பக்கம் அமர்ந்து படியுங்க.

• ஸ்டடி ரூமில், தண்ணீர் மற்றும் ஒரு ஹெல்தி ஸ்நாக்ஸ் கட்டாயம் இருக்கட்டும். அறையின் ஏதோவொரு பகுதியில், தண்ணீரை வைங்க. தாகம் எடுக்கும்போது, எழுந்து சென்று குடிக்கும் தூரத்தில் இரண்டும் இருக்கட்டும்.

• விளக்கு வெளிச்சத்துக்கு நேராகக் கீழிருந்து படிக்காதீங்க. உடலின் பின்புறம் விளக்கு இருக்கும்படியாக அமர்வது நல்லது.

• பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இன்டர்நெட்டை பயன்படுத்தும் பழக்கம் இருக்கா? ஸ்மார்ட்போனில் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாதீங்க. அடுத்தடுத்து கேம்ஸ், வாட்ஸ்அப் பார்க்கத் தோணும். கணினியை மட்டும் பயன்படுத்துங்க.

• படிக்கச் சொல்லி பெற்றோர் ஓயாமல் அறிவுறுத்திட்டே இருக்காங்களா? `இப்படிச் சொல்லிட்டே இருந்தா, ஒரு கட்டத்துல எனக்கு பயமா இருக்கு. நான் அக்கறையுடன் படிக்கிறேன்'னு சொல்லுங்க. சுட்டித்தனமாக இருக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே படிக்கவிடறதுதான் நல்லதுன்னு பெற்றோரும் புரிஞ்சுக்கணும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• இது பெற்றோருக்கு... குழந்தையிடம் தேர்வு நாளின்  காலை வேளையில், பாடம் தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்காதீங்க. `படிச்சதை பதற்றம் இல்லாம எழுது, மார்க் முக்கியமில்லே. உன்னோட பெஸ்ட்டை காட்டிட்டு வா' என்று மட்டும் சொல்லுங்க.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

எத்தகைய சூழலிலும், குழந்தைகளின் விருப்பமான பொழுதுபோக்கை பறிக்காதீங்க. குழந்தையின் பொழுதுபோக்குக்கு குறிப்பிட்ட நேரம் மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும்.

• தேர்வு முடிந்ததும் வினாத்தாள் குறித்தோ, பதில்கள் குறித்தோ விவாதிப்பது, அடுத்த தேர்வுகுறித்த பயத்தை ஏற்படுத்தும். ஸோ, அதைத் தவிர்க்கவும்.

• தேர்வு நேரத்தில், படித்துக்கொண்டே இருக்கணும் என்ற அவசியமில்லை. ஓய்வு கொடுத்து, அழகான வெவ்வேறு விஷயங்களையும் செய்யுங்க. இந்த நேரமெல்லாம்  படிக்கணும், இவ்வளவு நேரம் தூங்கணும், இந்த நேரத்தில்தான் சாப்பிடணும், விளையாடணும் என அழகா அட்டவணை ஒன்றை ரெடி பண்ணி, கண்ணில் படற மாதிரி ஒட்டி வெச்சுட்டு, முறையாகப் பின்பற்றுங்க.

• தினமும் இரவு 9 மணிக்குப் படுத்துடணும் என்பதில் உறுதியாக இருங்க. அதேமாதிரி, காலை 6 மணிக்கெல்லாம் கண் விழிச்சுடணும். எழுந்ததும் காற்றோட்டமான பகுதியில் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்க.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• தண்ணீர் குடிக்க எழுந்து போகணுமே என்பதற்காக, சிலர் தவிர்க்க நினைப்பீங்க. அது ரொம்ப தப்பு. உடலுக்குப் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் போனால், கழுத்து வலி, முதுகு வலி, தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதனால், அடிக்கடி தண்ணீர் குடிக்க மறந்துடாதீங்க.

• எப்பவும் நேராக உட்கார்ந்து படிங்க. 90 டிகிரி கோணத்தில் அமர வேண்டும் என்றில்லை. சம்மணம் போட்டு படிப்பது, கால்களை நீட்டிக்கொண்டு படிப்பது, நாற்காலியில் அமர்ந்து படிப்பது, சிறிது தூரம் நிதானமாக நடந்துகொண்டே படிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

படிக்கும்போது எந்த நிலையில் அமர்ந்து படிக்கிறோம் என்பது மிக முக்கியம். படுத்துக்கொண்டு படித்தால், கழுத்தில் சுளுக்கு ஏற்படும். புத்தகத்தைத் தரையில் வைத்து, கைகளைத் தரையில் ஊன்றிப் படித்தால், கை மூட்டுகளில் வலி ஏற்படும். உட்கார்ந்து படிக்கும்போது, தலையணை வைத்துச் சாய்ந்து படிப்பது இடுப்புப் பகுதியில் தசைப்பிடிப்பு பிரச்னையை ஏற்படுத்தும். இப்படி வித்தியாசமா உட்கார்ந்து உடல் வலியை விலை கொடுத்து வாங்காதீங்க.

படிக்கும்போது, நடுவில் தூக்கம் வந்தால் தவிர்க்காதீங்க. குட்டித் தூக்கம் போடறதில் தப்பில்லே. அதை மீறி படிக்கும்போதுதான் ஹார்மோன் குறைபாடு ஏற்படும். அது உடலை பாதிக்கும்.

படிப்பின் நடுவே உடல் சோர்வாக உணரும்போது, சில நிமிட இடைவெளி எடுத்து படிக்கலாம். அந்த நேரத்தில், எழுந்து காலாற நடப்பது, தண்ணீர் குடிப்பது, உடலை வளைத்து ஸ்ட்ரெட்ச் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து படிக்கிறதும் நல்லதில்லை. குறிப்பிட்ட பகுதி தசைகள் பாதிக்கப்படும். தசைப்பிடிப்பும் ஏற்படலாம். உட்காரும் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

படிக்க அமர்வதற்கு முன்பு, அரை மணி நேரம் எளிய உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. மிகவும் கடுமையான பயிற்சியாக இருக்கக் கூடாது. நண்பர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபவதும் சிறப்பு.

படிக்கும்போது சுறுசுறுப்பாகவும், எனர்ஜெட்டிக்காகவும் இருப்பது அனைத்தையும்விட முக்கியம். ஆகவே, மனதுக்குப் பிடித்த ஏதோவொரு வேலை அல்லது விளையாட்டை செய்துட்டு படிங்க. இதுக்கு பெற்றோரும் அனுமதிக்கணும்.

நேரம் கிடைக்கும்போது, நினைவுத்திறனை கூர்மையாக்கும் புதிர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது மனதுக்குப் புத்துணர்வு தரும்.

உணவும் ஆரோக்கியமும்!

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

ரிவிகித உணவு என்பது எப்போதுமே அவசியமானது. தேர்வு நேரத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். சாப்பிட வேண்டியதும்... தவிர்க்க வேண்டியதும்!

• காலை உணவு முக்கியம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், கவனமாகப் படிக்கவும் உதவும். காலை உணவைத் தவிர்க்கையில், உடல் சோர்வடைந்து படிப்பில் கவனம் சிதறும். மூன்று வேளையும் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். இடைப்பட்ட நேரத்தில் பழச்சாறுகள், சாலட், சூப் வகைகளைச் சாப்பிடலாம்.

• கண்டிப்பாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்கவும். டயரியா, டைபாய்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பழச்சாறுகளை வீட்டில் தயாரித்து அருந்துவது நல்லது. பழச்சாற்றில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கட்டும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• கேழ்வரகுக் கஞ்சியில் கால்சியம், புரோட்டீன் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத்தீனிகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

• தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் அருந்தலாம். இது, ஆழ்ந்த உறக்கத்தைத் தருவதுடன் மனஅழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.

• குளிர்பானங்களைத் தவிர்க்கவும். ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். மோர் அருந்துவது உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

• டீ, காபி குடிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்கவும். பித்தம் அதிகம் இருப்பதால், வளரும் உடலுக்கு டீ, காபி ஆரோக்கியமானதல்ல. இட்லி, சுண்டல் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிடலாம். முளைகட்டிய பயறுகள் சாப்பிடலாம்.

• பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு. உண்மையில், பழங்கள் சாப்பிடுவது எப்போதும் நன்மைதான். வெயில் காலங்களில் தர்பூசணிப் பழம் சாப்பிடலாம். நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடல் சோர்வடையாமல் பாதுகாக்கும்.

• அசைவ உணவுகளில் முட்டை, மீன் முக்கியமானது. இந்த வகை உணவுகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும். தேர்வு காலத்தின்போது, அசைவ உணவு வகைகளைத் தவிர்க்கவும். எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• மஞ்சளில் `குர்குமின்' (curcumin) நிறைந்துள்ளதால், மூளையை விழிப்புடன் வைத்திருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே, சமையலில் தேவையான மஞ்சள்தூளை பயன்படுத்தவும்.

• சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்வது நல்லது. இது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றும்.

• கணக்குப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வெண்டைக்காய் சாப்பிடுங்கள்’ என்பார்கள். இது உண்மைதான். வெண்டைக்காய் நினைவாற்றலை அதிகரிக்கும். எல்லா காய்கறிகளுமே உடலுக்கு நன்மையே.

• எல்லா வகையான கீரைகளிலும் இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

• கேரட்டில் `பீட்டா கரோட்டின்' (Beta Carotene) நிறைந்துள்ளது. பார்வைக் குறைபாட்டைப் போக்கும். பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

• ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. சளி, காய்ச்சல் போன்றவற்றிலிருந்து காக்கும். உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

• அவகேடோ பழத்தை அனைவரும் சாப்பிடலாம். ஞாபகசக்தி அதிகரிக்கும். ஆளி விதைகளில் துத்தநாகச் சத்து நிறைந்துள்ளதால், நினைவாற்றலுக்குத் துணைபுரியும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தமுடியும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• கிழங்கான் மற்றும் சுறா மீன்களில் டிஹெச்ஏ, ஒமேகா 3 உள்ளன. இவை மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன் நினைவாற்றலை அதிகரிக்கும்.

• பாதாம், வால்நட் போன்றவற்றில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. கம்ப்யூட்டர், செல்போனில் அதிக நேரத்தைச் செலவிடும் குழந்தைகளுக்கு மூளை ஆரோக்கியம் பாதிக்காமலிருக்க, இதுபோன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம்.

• நைட்ரேட் சத்து நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொண்டால், ரத்தஓட்டம் சீராகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். காலிஃப்ளவர், புரோக்கோலி போன்றவை நினைவாற்றலுக்கும் துணைபுரியும்.

• தொடர்ந்து படிப்பதால் உடல் சோர்வடையும். அதைச் சரிசெய்ய புரதச்சத்து அவசியம்.  பழக்கம் இருந்தால், அன்றாட உணவில் இரண்டு முட்டைகள் சேர்த்துக்கொள்வது நல்லது.

பாடங்களும் படிக்கும் விதமும்!

6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தொகுத்தறி மதிப்பெண்கள் 60. ஏற்கெனவே, வகுப்பில் 40 மதிப்பெண்களுக்கு வளரறி மதிப்பீடு முடிந்திருக்கும். நீங்கள் எழுதப்போவது 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு மட்டுமே. இந்தத் தேர்வுகளுக்கு என்னென்ன பாடங்களைப் படிக்கலாம்... அதிக மதிப்பெண்கள் பெற்றுத்தரும் பாடங்கள் எவை? இதோ சொல்கிறார்கள் ஆசிரியர்கள்...

தமிழ்

• பாடத்திலுள்ள எல்லா 1 மதிப்பெண் வினாக்களையும் (சரியான விடையைத் தேர்வு செய்தல், கோடிட்ட இடம், பொருத்துக, பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக, பொருள் கூறுக, எதிர்ச்சொல் தருக, மொழிப்பயிற்சி) படித்து நினைவில் வைப்பதுடன் எழுதிப் பாருங்கள். இந்தப் பயிற்சியை மிகச் சரியாக மேற்கொண்டாலே, 14 மதிப்பெண்கள் எளிதாகக் கிடைத்துவிடும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• மனப்பாடப் பகுதியை வார்த்தை வார்த்தையாக மனப்பாடம் செய்யாமல், பாடலாகப் பாடி பயிற்சி மேற்கொள்ளுங்கள். சட்டென்று மனதில் தங்கிவிடும். இதிலிருந்து 4 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

குறுவினாக்களைப் பொறுத்தவரை, மூன்று இயல்களில், உங்களுக்குப் பிடித்த ஏதாவது இரண்டு இயல்களில் உள்ள வினாக்கள் மட்டும் படித்தால் போதுமானது. இதில் பயிற்சி மேற்கொண்டாலே முழு மதிப்பெண் 12 பெற்றுவிடலாம்.

• 7ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள், கடிதம் ஒன்றை எழுதிப் பாருங்கள். அதில் 6 மதிப்பெண்கள் கிடைக்கும்.

• 1 மதிப்பெண், மனப்பாடம், குறுவினா, கடிதம் என இப்பகுதிகளை வாசித்தாலே 60-க்கு 36 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். ஏற்கெனவே, வளரறி மதிப்பீட்டில் 40-க்கு 40 பெற்றிருப்பீர்கள். இத்துடன் 36 சேர்த்தால் 76 மதிப்பெண்கள் வந்துவிடும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• 60-க்கு 60 பெற வேண்டுமல்லவா? நெடுவினாக்கள், கட்டுரை என எல்லாவற்றையும் வாசிக்கவும்.

• 9ஆம் வகுப்புக்கு இரண்டு தாள்கள். அதில் 1 மதிப்பெண், மனப்பாடம், குறுவினா என்று முதல் தாளுக்கும், 1 மதிப்பெண், மொழிப்பயிற்சி, பா நயம், கடிதம் என இரண்டாம் தாளுக்கும்  எழுதினாலே 60-க்கு 30 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

• குறுவினா, சிறுவினா, நெடுவினா பகுதிகளுக்கு, மூன்று இயல்களில் ஏதாவது 2 இயல்கள் வாசித்தால் போதுமானது.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

இறுதியாகச் சில வார்த்தைகள்...

1. அடித்தல், திருத்துதல் இல்லாமல் தெளிவாக எழுதுங்கள்.

2. ஒவ்வொரு விடைக்குப் பிறகும் கோடு போடுங்கள்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

3. சிறு, நெடுவினாக்களுக்கு உட்தலைப்பு, மையத் தலைப்பு இடுங்கள்.

4. மனப்பாடப் பகுதியில்... செய்யுள் பகுதி, ஆசிரியர் பெயரைத் தவறாமல் எழுதுங்கள்.

5. 1 மதிப்பெண், மனப்பாடம், குறுவினா, கடிதம், பிறகு மற்ற வினாப் பகுதிகள் என்ற வரிசையில் எழுதுங்கள்.

- ரா.தாமோதரன், அறிஞர் அண்ணா அரசு மே.நி.பள்ளி, கும்பகோணம்.

ஆங்கிலம்

ஆங்கிலப் பாடத் தேர்வில் எப்படி நல்ல மதிப்பெண்கள் பெறலாம்...

• முதலில் செய்யவேண்டியது, ஒவ்வொரு பாடத்திலும் உள்ள Glossary Words அனைத்தையும் தொகுத்துவைத்து, அவற்றின் Synonym-யுடன் தமிழ் பொருளையும் எழுதிவைத்து மனனம் செய்ய வேண்டும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• மனப்பாடப் பாடலை, அதை எழுதிய Poet Name-உடன் சேர்த்து மனனம் செய்ய வேண்டும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

3 பாடங்களிலும் உள்ள 2 மற்றும் 4 மதிப்பெண்கள் வினாக்களைத் தொகுத்து, நன்கு எழுதிப்பார்க்க வேண்டும்.

• பாடங்களின் இறுதியில் உள்ள 1 மதிப்பெண் வினாக்களை (Choose the correct answer, Fill in the blanks, True or false, General paragraph, Rearrange the jumbled sentences போன்றவை) நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

• Grammar items, Tenses, Adjectives, Adverbs, Articles இதுபோல, புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா இலக்கணப் பகுதிகளையும் ஆழ்ந்து படிக்க வேண்டும். இன்னும் சில Examples... சொந்தமாக, நம் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்து பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அந்தப் பகுதி மனதில் பதிந்துவிடும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• எல்லா Poems-ஐயும் மீண்டும் மீண்டும் நன்கு படித்துப் பார்த்து, அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு, அதாவது  Rhyme scheme, Rhyming words, Figures of Speech (metaphor, irony, personification etc)

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

போன்ற வினாக்களுக்கு விடை எழுதிப் பழகுங்கள்.  நீங்களே சுயமாகச் சில வரிகளுக்கு வினாக்களை வடிவமைத்து, அவற்றுக்கான விடைகளை எழுதிப்பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால், எந்தப் பாடலிலிருந்து எந்த வினா கேட்டாலும் உங்களால் விடையளிக்க முடியும்.

• Supplementary கதைப் பகுதி ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகப் படிக்க வேண்டும். படித்ததும் அவற்றிலுள்ள முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு வைக்கவும்.

• அடிக்கோடிட்ட வார்த்தைகளை அழகாக எடுத்து எழுதி, அவற்றின் பொருள் தெரியாதிருப்பின், அகராதி பார்த்து எழுதிவைக்க வேண்டும். சில நேரங்களில், `இக்கதைகளில் வரும் வார்த்தைகளுக்குப் பொருள் என்ன' என்று வினாக்கள் கேட்கப்படலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• கதைப் பகுதியிலிருந்தும் 4 மதிப்பெண்கள் வினா ஒன்று கேட்கப்படும். அதற்கேற்ப, 3 கதைப் பகுதிகளிலிருந்தும் ஒரு  Paragraph Question-க்கு தயார்செய்துகொள்ள வேண்டும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

Rearrange the Jumbled Sentences என்ற வினாக்கள் கதைப் பகுதியிலிருந்தே கேட்கப்படும். ஆகவே, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான இடங்கள், நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. அப்படிச் செய்வதால், உங்களால் இந்த வினாவுக்கான விடையைத் தவறின்றி எழுத முடியும்.

• எந்த மொழிப் பாடமாக இருந்தாலும், முதலில் கவனிக்கப்படுவது உங்கள் கையெழுத்து. இடம்விட்டு எழுதுதல், கறுப்பு மை பேனாவைப் பயன்படுத்தி அடிக்கோடு இடுதல் போன்றவற்றைத் திறம்படச் செய்வதன் மூலமாக முழு மதிப்பெண்கள் பெறமுடியும்.

- D.விஜயலட்சுமி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்.

கணக்கு

கணக்குத் தேர்வை திறம்பட எழுத, எளிய வழிமுறைகள்...

• மற்ற பாடங்களில் 1 மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதுவது வழக்கம். ஆனால், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை 5 மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு 2 மதிப்பெண், 1 மதிப்பெண் என்று எழுதுவது சிறந்தது. ஏனெனில், 5 மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதுவதனால் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கலாம். குறிப்பாக, செய்முறை வடிவியல் கணக்குகளைக் கடைசி நேரத்தில் செய்வதைவிட, முதலில் முடித்துவிடுவது சிறந்தது.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை விடைத்தாள்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்வது சிறந்தது. விடைத்தாளின் கீழ்ப்பகுதியில் தேவையான அளவுக்கு கோடிட்டு, அதன்கீழ் இந்தச் செயல்களைச் செய்யலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

முதலில் நன்கு தெரிந்த கணக்குகளுக்கு விடையளித்துவிட்டு, இறுதியாக ஐயப்பாடு உள்ள கணக்குகளைச் செய்வது நல்லது. சில கணக்குகளுக்கு விடை தவறாக இருந்தாலும், சரியான வழிமுறையில் செய்யப்பட்டிருந்தால், வழிமுறைகளுக்கான மதிப்பெண் கிடைக்கும்.

• ஃபார்முலா பயன்படுத்தும் கணக்குகளுக்கு வாய்ப்பாடுகளைச் சரியாக எழுதினால், அதற்கும் மதிப்பெண் உண்டு. எனவே, உரிய இடத்தில் வாய்ப்பாடுகளை அவசியம் எழுத வேண்டும்.

• 1 மதிப்பெண் வினாக்களுக்கு வினா எண், உள்பிரிவுக்கான எழுத்து (அ, ஆ, இ) மற்றும் விடை ஆகிய மூன்றையும் கட்டாயம் எழுத வேண்டும்.

• எண்களைத் தெளிவாக எழுத வேண்டும். உதாரணமாக, 7 என்ற எண்ணை எழுதும்போது, அதில் குறுக்குக்கோடு இடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும். எண்களைப் பாடநூலில் உள்ளபடி, உரிய முறையில் மட்டுமே எழுத வேண்டும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• கணக்குகளைத் தீர்க்கும்போது, சம குறிகள் ஒரே நேர்கோட்டில் வருமாறு எழுதுவது சிறந்தது. இறுதியில், கணக்குக்கான விடையை அடிக்கோடிட்டோ, கட்டமிட்டோ காண்பிக்கலாம்.

• வடிவியல் பெட்டியில் உள்ள கருவிகளை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கவராயம் தளர்வாக இல்லாமல், சரியாக இருந்தால்தான் வட்டத்தைச் சரியாக வரைய இயலும். பென்சிலைக் கூர்மையாகச் சீவி, தயாராக வைத்துக்கொள்வது நல்லது. கூடுமானவரை அழிப்பான் பயன்படுத்தாமல், வரைபடங்களை வரைய வேண்டும். வரைபடங்களில் அளவுத்திட்டம் அவசியம் எழுத வேண்டும் அதற்கும் சேர்த்துதான் மதிப்பெண் வழங்கப்படும். அளவுத் திட்டம் எழுதவில்லை எனில், அதற்குரிய மதிப்பெண் கழிக்கப்படும்.

• 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் என்பதால், சில வினாக்களுக்கு சிந்தித்து விடையளிக்க வேண்டும்.  எனவே, ஆசிரியர்கள் அளித்த பயிற்சியைப் பின்பற்றவும்.

• 6ஆம் வகுப்புக்கு தகவல் செயலாக்கம் என்ற பகுதியும், 9ஆம் வகுப்புக்கு நிகழ்தகவு என்ற பகுதியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளுக்கான கணக்குகளைக் கவனமாகச் செய்துபார்த்துவிட்டு தேர்வுக்குச் செல்லவும்.

• மற்ற பாடங்களைவிட கணக்குப் பாடம் நம் அன்றாட வாழ்வில் நேரடித் தொடர்புடையது. எனவே, மாணவர்கள் அனைவரும் கணக்குப் பாடத்தை ஈடுபாட்டோடு கற்றுக்கொண்டு, நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெற வாழ்த்துகள்.

- இரத்தின புகழேந்தி, அரசினர் உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

அறிவியல்

• இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்ற 4 பகுதிகளுக்கும் சம முக்கியத்துவம்  கொடுத்துப் படியுங்கள்.

• குறுவினாக்களுக்கான மைய விடைகளை நினைவில்வைத்து வாக்கியத்தை சொந்தமாக அமைக்கலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• நெடுவினாக்களில் முக்கிய கருத்துகளை பென்சிலால் அடிக்கோடிட்டுக் காண்பிக்கவும்.

• 1 மதிப்பெண் கேள்விகளுக்கான வினா எண்களைச் சரியாக எழுதவும்.

• சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும்போது, அடித்தல் திருத்துதல் இன்றி குறிப்பிடவும். அதனால், ஒரு விடையைத் தேர்வு செய்யும் முன்பு, பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.

• இயற்பியலில் உள்ள தேற்றம் மற்றும் சூத்திரங்கள், வேதியியல் பெயர்கள் ஆகியவற்றைத் தனி அட்டையில் எழுதி, அறையில் தினமும் பார்க்கும் வகையில் ஒட்டிவைத்துப் படிக்கவும்.

• சர்க்யூட் படங்களை நேர்த்தியாக வரைய வேண்டும். கலைச்சொற்களில் (Scientific Words) எழுத்துப் பிழைகள் கூடாது.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• வேதியியலில் வேதிச்சமன்பாடுகள் மிக முக்கியமானவை. தனிமங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகளில் பெரிய மற்றும் சிறிய எழுத்துகளில் கவனம் தேவை.

• தாவரவியல் படங்களை வரையும்போது கூர்மையான பென்சிலைப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் சிறிய பாகங்களும் தெளிவாகத் தனியாகத் தெரியும். வரைந்த படங்களுக்கு பாகங்களைக் குறிக்க மறந்துவிடக் கூடாது.

• தேர்வை எழுதி முடித்ததும் கேள்வி எண், சூத்திரங்கள், படங்கள் ஆகியவற்றை நிதானமாக ஒருமுறை சரிபார்க்கவும்.

- ஸ்ரீ.திலீப், அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

சமூக அறிவியல்

• மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து, வரலாற்றுப் பாடங்களை நாடகம்போல நடித்து, கருத்துகளை உள்வாங்கலாம். நாடகம் முடிந்த பின்பு ஆசிரியர் (அ) சக மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கு சொந்த நடையில் விடைகளைக் கூறிப் பழகினால், பாடம் நன்கு நினைவில் இருக்கும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• மாணவர்கள் இரண்டிரண்டு நபர்களாகப் பிரிந்து, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுப் பயிற்சி எடுக்கலாம். ஆண்டுகளை நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.

• வரைபடப் பயிற்சி மேற்கொள்ளும்போது, ஆட்சிப் பகுதிகளை வண்ணமிட்டுப் பழகினால், தேர்வில் இயல்பாக வந்துவிடும். வரைபடத்தில் வழித்தடங்களைக் குறிக்க, சில உத்திகளைக் கடைப்பிடிக்கலாம். உதாரணமாக, கடல்வழி மார்க்கம் குறிக்கும்போது, காகிதக் கப்பல் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்வது மனதில் பதியும்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

• ஒவ்வொரு பாடப் பகுதியின் பின்புறம் உள்ள உருவாக்க மதிப்பீட்டு செயல்பாடுகளைத் தவறாமல் செய்து பழகினால், பாடத்தை மனனம் செய்வதைத் தவிர்க்கலாம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

முக்கியத் தலைவர்களின் கருத்துகள், குறிப்புகள் போன்றவற்றை அட்டைகளில் எழுதியும், சுவரொட்டிகள் தயாரித்தும் ஒட்டிவைத்து தினமும் பார்ப்பதால் மனதில் பதியும்.

• தேர்வின் கடைசி நேரம் வரை எழுதிக்கொண்டிருக்காமல், 10 நிமிடங்களுக்கு முன்பே முடித்துவிட்டு, எழுதியவற்றை ஓர் ஆசிரியரைப் போன்று படியுங்கள். அப்போதுதான் தவறுகள் கண்களுக்குப் புலப்படும். திருத்தி எழுதலாம்.

- மூ.சங்கீதா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

ணவியல் நிபுணரான மேனகா, சென்னை ராணி மேரி கல்லூரியில், உணவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர். பிரபல தனியார் மருத்துவமனைகளில் உணவியல் துறையில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர். தற்போது, `ரிஜிஸ்டர்டு டயட்டீஷியன்' (Registered Dietitian) இன்டர்ன்ஷிப்பை முடிக்கவிருக்கிறார்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

னநல மருத்துவத்தில் 40 வருட அனுபவம்கொண்டவர், மருத்துவர் ஜெயந்தினி. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

12 வருடங்களாக இயன்முறை மருத்துவம் செய்துவருபவர், பிசியோதெரபிஸ்ட் வசந்த்.

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

தொகுப்பு : வி.எஸ்.சரவணன், ஜெ.நிவேதா, ஜி.லட்சுமணன், கிராபியென் ப்ளாக்

படங்கள்: வீ.நாகமணி, செ.பிரபாகரன். வ.ரெ.தயாள்