Published:Updated:

பரதனின் படிப்பு

பரதனின் படிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
பரதனின் படிப்பு

கவிஞர் மலரடியான் - ஓவியம்: பிள்ளை

பரதனின் படிப்பு

பரதன் என்னும் சிறுவனோ
பாடம் படிக்க எண்ணினான்
பிடித்த நண்பன் பேகனும்
பிடித்தான் போனில் பரதனை!

மட்டைப் பந்து ஆட்டமே
மாதா கோயில் தெருவிலே
நெட்டை மணியும் ஆடுறான்
நீயும் வாடா போகலாம்

என்றே அழைக்கப் பரதனும்
எழுந்தே பறந்தான் ஆசையாய்
அன்றும் படிப்பு நின்றது
அதுபோல் பல நாள் சென்றது!

தேர்வு நாளும் நெருங்கியது
சிந்தையில் தெளிவு பிறந்தது
ஆர்வம் பொங்கப் படித்தனன்
அழகாய் தேர்வை முடித்தனன்!

இந்தத் தெளிவு முன்பாகவே
இருந்தால் இல்லை பதற்றமே
என்றே உணர்ந்து கொண்டவன்
என்றும் படிக்கத் தொடங்கினான்!