Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஆமை கண்ணீரும் பட்டாம்பூச்சிகளும்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

2015ஆம் ஆண்டில், அமேசான் காடுகளில் பட்டாம்பூச்சிகளை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களுக்கு வியப்பான விஷயங்கள் கிடைத்தன. வெயில் காலங்களில் பட்டாம்பூச்சிகள், ஆமைகளைச் சுற்றிவந்து அவற்றின் கண்கள் அருகே அமர்வதை ஆராய்ந்தனர். ஆமைகளின் கண்ணீரை பட்டாம்பூச்சிகள் பருகுவது தெரிந்தது. ஆமை கண்ணீரில் இருக்கும் சோடியம், பட்டாம்பூச்சிகளின் உடலுக்கான நீர்ச் சமநிலையைச் சீராக்குகிறதாம். அதற்காகவே, ஆமையின் கண்களில் வடியும் நீரைப் பருகுகின்றன என்று கண்டறிந்தனர்.

புதிய வீட்டுக்கு டால்பின்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ட அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் இருக்கும் தேசிய நீர்வாழ் அருங்காட்சியகத்தின் சிறப்புகளில் முக்கியமானது டால்பின்கள். 9 வயது முதல் 26 வயது வரையில் அங்குள்ள 7 டால்பின்கள் செய்யும் வித்தைகளைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். 2018ஆம் ஆண்டில், அந்த டால்பின்களுக்கு வேறு ஓர் இடத்தில் மிகப்பெரிய சரணாலயம் கட்டலாம் என முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ‘அந்த  டால்பின்களை கடலிலே விட்டாலும், பரிச்சயம் இல்லாத இடத்தில் வாழ்வது கடினமே. ஆகவே, கிட்டத்தட்ட கடலின் உணர்வைக்கொண்டு வரும் அளவுக்கான பெரிய இடத்தில் சரணாலயம் அமைப்பதே  சிறந்த வழி’ என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப புதிய சரணாலயம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல் மாதிரி ஸ்பீக்கர்

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக, ஸ்மார்ட் ஸ்பீக்கர்களும் அதிகமாக அறிமுகமாகி வருகின்றன. சமீபத்திய அறிமுகம், போட் ஸ்டோன் 700ஏ ஸ்மார்ட் ஸ்பீக்கர். பெயருக்கு ஏற்ப, பார்ப்பதற்கு கல் போன்று உறுதியாக இருக்கிறது. தூசி மற்றும் நீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவறி விழுந்தாலும் எளிதில் கீறல் விழாது. வாய்ஸ் கமென்ட் வசதியுள்ளது.  நம் ஸ்மார்ட்போனில் போட் ஆப் பயன்படுத்தி, அலெக்ஸா மூலம் கட்டளையிடலாம். மைக்ரோ யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

செமோலங்கமா தெரியுமா?

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

மயமலையில் இருக்கும் செமோலங்கமா சிகரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எவரெஸ்ட் சிகரத்தின் இயற்பெயர்தான் செமோலங்கமா. திபெத்திய மொழிச் சொல். வேறு பல உள்ளூர் பெயர்களும் உண்டு. ஆங்கிலேய ஆட்சியின்போது, இந்திய பிரிட்டிஷ் சர்வேயரான ஜெனரல் ஆண்ட்ரூ வாவ், 1865ஆம் ஆண்டில் புவியியலாளர் ஜார்ஸ் எவரெஸ்ட் நினைவாக இந்தப் பெயரைச் சூட்டினார். ராதானாத் சிக்தார் (1813–1870) என்கிற வங்காளத்து இந்தியரே, 1852ஆம் ஆண்டில் இதன் உயரம் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். தியோடலைட்டு என்னும் கருவியினால், முக்கோண முறை அடிப்படையில் உயரத்தைக் கணித்தார்.