அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”

“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”

“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”

“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”

தேர்தல் வந்தால் அரசியல்வாதிகள் பிஸியாவதைப் போல் சினிமாவுலகமும் பிஸியாகி விடும். ஒருபுறம் தாங்கள் சார்ந்த கட்சிக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய நட்சத்திரங்கள் களமிறங்கினால், இன்னொருபுறம் வேட்பாளர்களாகவும் அவதாரமெடுப்பார்கள். இந்தத் தேர்தலில் களமிறங்கும் சில சினிமா நட்சத்திரங்களைச் சந்தித்தோம்.

“தமிழகத்திலேயே ஒரு பெண் மண்டலப் பொறுப்பாளராக இருப்பது, மக்கள் நீதி மய்யம் கட்சியிலதான். நான் பதினாறு சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட சென்னை மண்டலத்தைக் கவனித்துக்கொள்கிறேன். கட்சியின் ஆடிட்டிங் மற்றும் ஃபைனான்ஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருக்கிறேன்.” - பிரசாரத்தின் இடையே நம்மிடம் பேசினார், ‘மக்கள் நீதி மய்ய’த்தின் மத்திய சென்னைத் தொகுதி வேட்பாளரும், நாசரின் மனைவியுமான கமீலா நாசர்.

“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”

“அப்பா கமாலுதீன், தினத்தந்தியில் போட்டோகிராபராக 37 வருடம் பணியாற்றியவர். அதுக்கு முன்னாடி கொஞ்சகாலம் சினிமாவுல இருந்தார். முதன் முதலில் ஜெயலலிதாவைப் போட்டோ எடுத்தது, எங்க அப்பாதான். ஜெயலலிதா கையில ஒரு டிராஃபி வெச்சுக்கிட்டு இருக்கிற அந்தப் போட்டோ பின்னாடி ரொம்பப் பிரபலமாச்சு.

1994-ல் ‘அவதாரம்’ படம் மூலமாக சினிமாவில் களமிறங்கினேன். பிறகு, 1996-ல் ‘தேவதை’ என்ற படத்தைத் தயாரித்தார், நாசர். இந்தப் படம் மூலம் படத் தயாரிப்புப் பணிகளில் இறங்கி, முழுநேரமாக சினிமாவில் பணியாற்றத் தொடங்கினேன். 2004-ல் இருந்து 2014 வரை தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தேன்.

2014-ல் மூத்த மகன் ஃபைசலுக்கு நடந்த சாலை விபத்துக்குப் பிறகு, அவனுக்காக எல்லாப் பணிகளிலிருந்தும் விலகினேன்.  இப்போது மகன் கொஞ்சம் தேறி வருகிறான். இதுக்கிடையில்தான், கமல் சார் கட்சி ஆரம்பித்து, சில பொறுப்புகளை ஏற்கச் சொன்னார். அது இப்போது, தேர்தல் களம் வரைக்கும் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது” என்கிறார் கமீலா நாசர்.

-அலாவுதின் ஹுசைன்

படம்: தே.அசோக்குமார்