Published:Updated:

'மொத்த கட்டடமும் என் மீது விழுந்ததாக உணர்ந்தேன்!' - புனேவில் சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலி

புனே விபத்து
News
புனே விபத்து ( ANI )

புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published:Updated:

'மொத்த கட்டடமும் என் மீது விழுந்ததாக உணர்ந்தேன்!' - புனேவில் சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலி

புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனே விபத்து
News
புனே விபத்து ( ANI )

மகாராஸ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்று அதிகாலை புனேவின் கொந்த்வா (Kondhwa) பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்
ANI

அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச் சுவரை ஒட்டி பள்ளமான பகுதியில் சில குடிசைகள் இருந்துள்ளன. சுவர், குடிசைகளின் மேல் விழுந்ததால் அதிலிருந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனேவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் அந்த சுவருக்கு அருகில் தற்காலிகமாகக் குடிசை அமைத்து வசித்து வந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் பீகார் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சுவருக்கு முன் புறம் நின்றிருந்த கார்களும் குடிசைகள் மேல் சரிந்ததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

புனே விபத்து
புனே விபத்து
ANI

விபத்தை நேரில் பார்த்த விமல் ஷர்மா என்ற கட்டட தொழிலாளி இந்தியா டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், “ நள்ளிரவு 1:30 மணிக்கு பெரும் சத்தத்தைக் கேட்டேன். அடுத்த சில நிமிடங்களில் அருகில் நின்றிருந்த மொத்த கட்டடமும் என் மீது சரிந்ததாக நினைத்தேன். இடிந்த சுவரில் என் கழுத்து பகுதி வரை புதைந்துவிட்டது. நான் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தேன். பின்னர் சிலர் வந்து இடிபாடுகளிலிருந்து என்னை வெளியே இழுத்தனர்” எனக் கூறியுள்ளார்.

இறந்தவர்களில் 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் அடங்குவர் எனக் கூறப்பட்டுள்ளது. ‘ சுவர் இடிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கி தரப்படும் என புனே கமிஷனர் வெங்கடேஷம் தெரிவித்துள்ளார்.