அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• அர்னால்டு ஸ்வாஸ்நேகர் நடிப்பில் உலகையே கலக்கிய திரைப்படம், ‘டெர்மினேட்டர்.’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் உலகளவில் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் அமோக வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில், இப்படத்தின் ஆறாவது பாகமாக நவம்பர் 1-ம் தேதி வெளியாகவிருக்கிறது, ‘Terminator: Dark Fate’ திரைப்படம். இது, முதல் இரண்டு பாகங்களான ‘டெர்மினேட்டர்’ மற்றும் ‘டெர்மினேட்டர் : ஜட்ஜ்மென்ட் டே’ படங்களின் தொடர்ச்சியாகும். வெல்கம் பேபி!

இன்பாக்ஸ்

• வித்தியாசமான வேடங்களில் நடித்துக் கலக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் அடுத்து கபில்தேவ் வேடத்தில் ‘83’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 1983 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்காக தர்மசாலாவில் கபில்தேவோடு தீவிர கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டுவருகிறார் ரன்வீர். படத்தில் நடிக்கிற நடிகர்களுக்காகச் சிறப்புப்பயிற்சி முகாம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது படக்குழு. இங்கே மற்ற நடிகர்களுக்கு ஜிம்மி அமர்நாத், மதன்லால், யஷ்பால் ஷர்மா, பல்விந்தர்சிங் சந்து எனப் பெரிய படையே பயிற்சி அளிக்கிறார்கள். கெட் ரெடி ஃபோக்ஸ்!

• ‘விஜய் 63’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, ஷெட்யூல் பிரேக்கில் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் நடிக்கிறார். தவிர, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நாகர்ஜுனாவோடு `பங்கார்ராஜூ’ என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார். தலைவி பிஸி!

இன்பாக்ஸ்

• வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் `அசுரன்’ முடிந்ததும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். கார்த்திக் இந்தப் படத்துக்கான ப்ரீப்ரொடக்‌ஷன் வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டார். படத்துக்கான நடிகர்கள் தேர்வு மதுரையில் நடந்துகொண்டிருக்கிறதாம். அநேகமாக இந்தப் படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள். கோட்ட!

• அழிந்துவரும் இனமாகக் கருதப்படும் `கியூபா முதலைகள்’ சென்னை முதலைப் பண்ணையில் கடந்த சில ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஒன்று ஒலிமாசுக்கு பலியாகியிருக்கிறது. பண்ணைக்கு அருகிலிருந்த ஸ்டார் ஹோட்டலில் நடந்த விழாவில் மிக அதிக ஒலியில் பாடல் இசைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டு இந்த முதலை இறந்துபோயிருக்கிறது. இந்த முதலைப்பண்ணையை உருவாக்கியவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரோமுலஸ் விட்டேக்கர் ‘‘நாங்கள் எவ்வளவோ எச்சரித்தும் அவர்கள் சத்தத்தைக் குறைக்கவேயில்லை’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். வால்யூமை குறைங்க ப்ரோ!

• சூர்யாவுடன் நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் சாய் பல்லவி, மலையாளத்தில் ஃபஹத் பாசிலுடன் இணைந்து ‘அதிரன்’ என்ற சைகலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் நடித்துவருகிறார். மூன்று வருடங்கள் கழித்து  மலையாளப் படத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவியின் நடிப்பை, படத்தின் டீஸரைப் பார்த்தே பாராட்டிவருகிறார்கள் மலையாள ரசிகர்கள். தமிழில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படமொன்றில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ப்ரேமி!

இன்பாக்ஸ்

• தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுக்கும் ரெஜினாவுக்கும் காதல் என டோலிவுட்டில் கிசுகிசு பரவ, செம கோபமாகிவிட்டார் ரெஜினா.  “எனக்கு யாரோடும் காதல் இல்லை. இப்போதைக்கு என்னுடைய காதல் எல்லாம் என் வேலையில்தான். இப்படியெல்லாம் செய்தி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்” எனக் கோப அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சாய் தரம் தேஜிடம் விசாரிக்க, அவர், ‘‘ஆமாமா... எனக்கும் அவருக்கும் ரகசியத் திருமணமே ஆகிவிட்டது’’ எனக் கிண்டல் செய்திருக்கிறார்! காதலிக்க நேரமில்லை!

இன்பாக்ஸ்

• ஆறு வயது மிசோரம் பையன் டெரக் சி லால்ச்சனிமாதான் சென்றவார இணைய வைரல். தன் பக்கத்து வீட்டுக் கோழிக்குஞ்சைத் தெரியாமல் மிதித்துவிட, அதைத் தூக்கிக்கொண்டு தன் கையில் இருந்த பணத்தோடு மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்க்கச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கோழிக்குஞ்சு இறந்துபோனதுகூடத் தெரியாமல் அப்பாவியாக வந்து நின்ற சிறுவனைப் படமெடுத்து யாரோ ஃபேஸ்புக்கில் போட, பையனின் கருணை உள்ளத்தையும் பொறுப்பையும் பாராட்டித் தள்ளிவிட்டார்கள் நெட்டிசன்ஸ். பிஞ்சு மனசு!

இன்பாக்ஸ்

• உலகில் 20 பேர் மட்டுமே பேசக்கூடிய ‘ஹைடா’ மொழியில் தயாராகவிருக்கிறது ‘Edge of the Knife’ திரைப்படம். ஹைடா மொழியறிந்த படத்தின் இயக்குநர் க்வாய் ஈடன்ஷா, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அழிவு நிலையில் உள்ள தங்கள் மொழியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப்படத்தை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். ஹை...டா!

இன்பாக்ஸ்

• ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தில் ஒன்றாக நடித்துக்கொண்டிருக்கும் ரன்பீர் கபூருக்கும் அலியா பட்டுக்கும் காதல் என்பதுதான் பாலிவுட்டில் பரபரப்புப் பேச்சு. இருவரும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், `ரோக்கா’ என்கிற வடநாட்டு நிச்சயதார்த்த சடங்கை நடத்திவிட்டதாகவும் ஏகப்பட்ட வதந்திகள். ஆனால் இருவரும் அதைப் பற்றியெல்லாம் யாரிடமும் மூச்சுகூட விடாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார்களாம். சிறுசுகள காதலிக்க விடுங்கப்பா!

• கால்பந்து உலகின் சிறந்த மிட்ஃபீல்டர்களில் ஒருவரான மிசுட் ஓசில், ஷாருக்கானின் தீவிர ரசிகர். சமீபத்தில் நடைபெற்ற அர்செனல்-நியூகேஸ்ட்டில் போட்டியை நேரில் வந்து பார்க்கும்படி ஷாருக்கானை அழைத்திருக்கிறார் மிசுட். அழைப்பை ஏற்று ஷாருக்கும் அர்செனல் நகருக்குப் பறந்து போனார். இதற்கிடையே அமைன் கல்சி என்ற ஸ்வீடன் உலக அழகியுடன் மிசுட் ஓசிலுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. இது திருமணத்துக்கான அழைப்பாகவும் இருக்கலாம் என வலைதளத்தில் வலை பின்னுகிறார்கள் ரசிகர்கள். ஃபேன் பாய்ஸ்!