சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை

வாசகர் மேடை
News
வாசகர் மேடை

வாசகர் மேடை

வணக்கம் வாசகர்களே!

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. பொதுவாக வாசகர்கள் கேள்விகள் அனுப்ப, பத்திரிகைகளில் ஒருவர் பதில் எழுத, ‘கேள்வி - பதில்’ பகுதி வெளியாவது வழக்கம். ஆனால் கொஞ்சம் மாத்தி யோசித்ததில் உருவானதுதான் இந்த வாசகர் மேடை. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை

? கமலுக்கு டார்ச்லைட் சின்னம். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்ன சின்னம் தரலாம், ஏன்?

? இன்றைய இன்டர்நெட் யுகத்துக்கு ஏற்றபடி நச்சுனு ஒரு பழமொழி, ஸாரி, புதுமொழி சொல்லுங்க!

? கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டுமானால் எந்த நடிகரை/ நடிகையை அணியில் சேர்த்துக்கொள்ளலாம், ஏன்? (சுருக்கமாகச் சொல்லவும்)

? எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இன்னும் என்னென்ன வித்தியாசமான முறைகளைக் கையாளலாம்?

? நீங்கள் போடும் ஒரு சட்டம் நாளையில் இருந்தே அமலுக்கு வரும்னா என்ன சட்டம் போடுவீங்க?

உங்கள்  பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.