சமூகம்
Published:Updated:

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
News
வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

மெரிக்கா நாட்டின் எதேச்சதிகார நடவடிக்கைகளால், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது, அமெரிக்கா - ஈரான் அணு ஒப்பந்தப் பிரச்னை. இந்தப் பிரச்னை, வளைகுடா நாடுகளை மட்டுமன்றி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

‘ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த ஆறு மாதங்கள் கால அவகாசம் மே 1-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், மே 2-ம் தேதியிலிருந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது இந்தியா. இதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டதால், நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் திண்டாட்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

கடந்த 2015-ம் ஆண்டில், ஈரானின் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க, ‘கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம்’ என்ற ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது, அமெரிக்கா. சில வல்லரசு நாடுகளும் அதில் கையெழுத்திட்டன. இதைத்தொடர்ந்து, ஈரான் மீதிருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு மீண்டும், அந்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று ஈரான் மீது குற்றம்சாட்டி அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது அமெரிக்கா. கூடவே, ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தது. மேலும், ‘இந்தியா உட்பட எட்டு நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை, ஆறு மாதங்களுக்குள் நிறுத்த வேண்டும்’ என்றும் கெடு விதித்தது. 

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

இதுவே ஏகப்பட்ட பதற்றத்தைக் கூட்டிய நிலையில், ஈரான் நாட்டு ராணுவமான இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படையை, ‘பயங்கரவாத அமைப்பு’ என்று அறிவித்தது அமெரிக்கா. அத்துடன், பாரசீக வளைகுடாவில் தனது போர்க்கப்பலையும் கொண்டுவந்து நிறுத்தியது. இதில் கோபமடைந்த ஈரான், ‘மற்ற வல்லரசுகள், அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பதாக அளித்த வாக்குறுதியை, 60 நாள்களில் நிறைவேற்றா விட்டால், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை ஈரான் விலக்கிக்கொள்ளும். யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்’ என்று ஒரு குண்டைப் போட்டது. அத்துடன், ‘ஹார்மஸ் ஜலசந்தியை மூடுவோம்’ என்றும் எச்சரித்துள்ளது. உலகின் 25 சதவிகித எண்ணெய்ப் போக்குவரத்து இதன் வழியாகத்தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

“நியாயமாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் ஈரானின் இந்த அறிவிப்புகள். அச்சுறுத்தல்களால் ஈரானை வளைக்க முடியாது என்று நன்றாகத் தெரிந்தும், அமெரிக்கா இப்படி நடந்துகொள்கிறது. அது எதிர்மறை விளைவு களைத்தான் ஏற்படுத்தும். அமெரிக்காவின் போருக்கான செயல்திட்ட அறிவிப்பும் ஈரானைப் போருக்குத் தூண்டும் ஒரு சதிதான்’’ என்று  சந்தேகிக்கிறார்கள், உலக அளவிலான அரசியலை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள். 

அதேசமயம் உலக நாடுகள் பலவும் ஈரானை ஆதரிக்கின்றன. ‘அமெரிக்கா விதித்திருக்கும் தடையைச் செயல்படுத்தமுடியாது’ என்று துருக்கி அறிவித்துவிட்டது. சீனாவும் அதையே ஆமோதிக்கிறது. ‘ஈரான் தனியாக இல்லை’ என்று கர்ஜித்துள் ளது ரஷ்யா. ஏன், பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடு கள்கூட அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்க வில்லை. ஆனால், அமெரிக்க ஆணையை சிரம் மேல் ஏற்று, எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட்ட இந்தியா, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த ஈரான் அமைச்சரிடம், ‘பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று கூறித் திருப்பி அனுப்பிவிட்டது. ஈரான் மீதான பொருளாதாரத்தடை நீடித்தால், ஒரு பீப்பாய் 70 டாலர் என்ற விலையில் இருக்கும் கச்சா எண்ணெய் 100 டாலரைத் தொடும். இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங் களுக்கு 2,500 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்படக்கூடும். தவிர, நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடை யிலான சமமின்மை அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்து, விலைவாசியும் உயரக்கூடும். ஆனால், மொத்தப் பிரச்னை யையும் அமுக்கிவிட்டிருக்கிறது இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளுக்கான காத்திருப்பு.

வலுக்கும் அமெரிக்கா - ஈரான் பிரச்னை - பெட்ரோலுக்கு அல்லாடப்போகும் இந்தியா!

ஆனால், “அரசியல், ராஜதந்திர உறவுகள், ஐரோப்பிய நாடுகளுடனான வணிகம், சாபாஹார் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட விஷயங்களில் ஈரானின் நட்பு இந்தியாவுக்கு அவசியம். அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்குத் தலையாட்டுவது, இந்திய அரசியல் பொருளாதார இறையாண்மையை கேலிக்குள்ளாக்கிவிடும். நாட்டின் பொருளாதாரச் சுதந்திரத்தை எப் போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது” என்கிறார்கள், சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

மேற்கு ஆசியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஈரானும் இறங்கிவராது. போர் ஏற்பட்டால், ஈரான் மட்டு மல்ல... மேற்கு ஆசிய மண்டலமே பாதிப்புக்குள்ளாகும். உலக நாடு களுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். ஈரான், மற்றொரு வடகொரியாவாக மாறக்கூடும். இதைத் தடுக்கவேண்டிய கடமை இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்குமே இருக்கிறது.

- கே.ராஜு