
திருவள்ளூர்: அம்பத்தூர் வட்டாட்சியர் நாகேஸ்வரராவ் அடகு கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியதாக நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தாசில்தார் லஞ்ச வழக்கில் கைதாகி இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி பகுதியில் உள்ள அடகு கடை உரிமத்தை புதிப்பிக்க, அப்பகுதி தாசில்தார் நாகேஸ்வரராவ் 40 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று திருள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம், அதே பகுதியை சேர்ந்த துளசிராம் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளிப்பட்டை சேர்ந்த துளசிராம் என்பவருக்கு சொந்தமான நிலம் கே.ஜி. கண்டிகையில் இருக்கிறது. அந்த நிலத்திற்கு செல்வ நிலை சான்றிதழ் (சால்வன்சி சர்டிஃபிகேட்) வங்குவதற்காக பள்ளிப்பட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். வி.ஏ.ஓ, ஆர்.ஐ என அனைவரும் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுத்த பிறகும், சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது குறித்து துளசிராம், தாசில்தார் திலகத்தை அனுகி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் சர்டிஃபிகேட் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ‘அந்த நிலத்தோட மதிப்பே ஒன்றரை லட்சம் தான். நீங்க இவ்வளோ பணம் கேட்குறீங்களே?’ என துளசிராம் கூறியிருக்கிறார். சரி உனக்காக வேணும்னா 5 ஆயிரம் குறைச்சுக்குறேன் என கூறி 15 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க மணம் இல்லாத துளசிராம், பொறுமையாக இருந்துள்ளார். ஆனால் வட்டாட்சியரே மீண்டும் துளசிராமை தொடர்பு கொண்டு, நாளை காலை 9.30 மணிக்குள்ள என் குவாட்ரஸுக்கு பணம் கொண்டு வரலைன்னா, இனிமே நீ சான்றிதழே வாங்க முடியாது என மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.
##~~## |