பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கடிதங்கள் - அள்ளுதுங்க!

கடிதங்கள் - அள்ளுதுங்க!
News
கடிதங்கள் - அள்ளுதுங்க!

கடிதங்கள் - அள்ளுதுங்க!

கடிதங்கள் - அள்ளுதுங்க!

டிகர் சங்கத் தேர்தல் குறித்த விரிவான அலசல் அருமை. எப்படியோ தேர்தல் என்றாலே அவர்களும் பரபரப்பாகி, நம்மையும் பரபரப்பாக்கிவிடுகிறார்கள்.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

`வாசகர் மேடை’க்கு வந்த பதில்கள் அனைத்தும் அமர்க்களம். 'வலைபாயுதே'வுக்கு செம டஃப் கொடுக்கிறது வாசகர் மேடை!

- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

நிலம், நீர் காக்கச் சொன்ன தலையங்கத்துக்கு பேஷாக ஒரு ‘ஓ’ போடலாம்!

- ஜி.லட்சுமி வாசுதேவன், வேளச்சேரி.

சொல்லாம கொள்ளாம புதுசு புதுசா எதும் பண்றதே விகடனாருக்கு வேலையாப் போச்சு. ‘ரோலிங் சார்’னு  ரெண்டு பக்கத்துக்குப் புதுசா ஜமாய்ச்சுவெச்சிருக்கீங்களே!

- வெங்கடேசன், புதுப்பாளையம்.

சொல்லவருகிற விஷயத்தை நறுக் சுருக் நச்சென்று சொல்கிறது ‘ஆன்லைன் ஆஃப்லைன்.’

- அ.யாழினி பார்வதம், சென்னை-78.

ந்த வார சொல்வனம் பகுதியில் அரவிந்தன் எழுதிய ‘இருப்பின் பாரம்’ கவிதை, மனதை பாரமாக்கியது.

- செல்வகுமார், காங்கேயம்.

‘இன்னா நாற்பது இனியவை நாற்பது’ இரண்டாவது வாரத்திலேயே பக்கங்களைப் புரட்டித் தேடவைத்துவிட்டது.

- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

ரீமேக்கும் அதற்கான வரிகளும்... அள்ளுதுங்க!

- எம்.செல்லையா, சாத்தூர்.

சுற்றுச்சூழல் குறித்து மத்திய அரசு எவையெவற்றை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று கோ.சுந்தர்ராஜன் எழுதிய கட்டுரை, இந்த நாள்களில் தேவையான ஒன்று.

- அமுதா கண்ணன், மேலூர்.

ஆனந்த விகடன் வாசகர் மெகா தேர்தல் போட்டி! 2019

கடிதங்கள் - அள்ளுதுங்க!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, முடிவுகளும் வெளியாகிவிட்டன. மத்தியில் ஆட்சியும் அமைந்துவிட்டது. 'என்னாச்சு வாசகர் மெகா தேர்தல் போட்டியோட ரிசல்ட்?' என்று ஆர்வம் பொங்க பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் காத்திருக்கிறீர்கள். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல், கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. அந்தத் தொகுதியையும் கணக்கில்கொண்டே போட்டி நடத்தப்பட்டது. அந்தத் தொகுதிக்கும் சேர்த்தேதான் நீங்களும் உங்களுடைய முடிவுகளைப் பதிவுசெய்திருக்கிறீர்கள். எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியானதும் போட்டி முடிவுகள் வெளியாகும்.