இந்த ஆண்டு, இந்தியா முழுவதிலும் உள்ள 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில், இன்று 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட, பல நூறு பேர் கலந்துகொண்டனர்.

இன்று வழங்கப்பட்ட விருதுகளை நடன இயக்குநர் பிரபு தேவா, பங்காரு அடிகளார், நடிகர் மோகன்லால், ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அசண்டா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பாடகர் சங்கர் மகாதேவன், செஸ் வீராங்கனை ஹரிகா, இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர் போன்ற பலருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
