Published:Updated:

சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு? - கே.எஸ்.அழகிரி விளக்கம்!

சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு? - கே.எஸ்.அழகிரி விளக்கம்!
News

சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் உண்டா என்ற கேள்விக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கமாகப் பதிலளித்தார்.

சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு? - கே.எஸ்.அழகிரி விளக்கம்!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை (மார்ச்-13)  நாகர்கோவிலுக்கு வருகிறார். அதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட, பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எங்கள் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி, மக்களுக்கு கொடுக்கும் உறுதிகள் மகத்தானதாக இருக்கும். பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகள் மக்களை ஜாதி, மத உணர்வைக்கொண்டு பிரிக்கின்றன. ஜனநாயகத்தை நிலைநாட்ட பா.ஜ.க-வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் பணநாயகத் தேர்தல் நடைபெறுவதைத் தடுத்து, நேர்மையான வகையில் தேர்தல் நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதியும் உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.

சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு? - கே.எஸ்.அழகிரி விளக்கம்!

ஆளும் கட்சிகள், தமிழகத்தின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 50 கோடி ரூபாய் ஒதுக்கி, அங்கங்கே பணப் பட்டுவாடா செய்யத் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எங்களது சகோதரர்கள்தான். எப்போது வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மதுரை சித்திரைத் திருநாள் நடப்பதால், தேர்தலை மாற்றிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள். மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அந்த மாவட்டத்திற்கு சலுகை அளிக்கலாம்.

சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு? - கே.எஸ்.அழகிரி விளக்கம்!

நாளை ராகுல் காந்தி கலந்துகொள்ளும் கூட்டத்தில் வேட்பாளர் அறிவிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுப்பீர்களா எனக் கேட்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி விதிமுறையில், இன்னாருக்கு சீட் கொடுக்க வேண்டும், இன்னாருக்கு கொடுக்கக் கூடாது என்பது இல்லை. கட்சி நிர்வாக நடைமுறைக்காக சில முடிவுகள் எடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அப்படி எடுத்ததாகத் தெரியவில்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் எவ்வளவு கொடிய தவறு செய்திருந்தாலும் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து ஓராண்டு ஆகியும் ஏன் ஜாமீன் வழங்கவில்லை என நீதிபதியே கேட்டும், தமிழக அரசின் காதில் விழவில்லை. எனவே, முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்றார்.