தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

 `சுயம்பு' பெண்கள்!

புகழ்பெற்ற `ஃபோர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் டாப்-80 தொழிலதிபர் பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநராக வலம்வரும் 58 வயது ஜெயஸ்ரீ உள்ளல், இந்தப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சொத்துகளின் மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

23-ம் இடத்தைப் பிடித்துள்ள நீரஜா சேத்தி, 1980-ம் ஆண்டு, கணவர் பாரத் தேசாயுடன் சேர்ந்து 2,000 டாலர் பணத்துடன் சின்டெல் நிறுவனத்தை வீட்டிலேயே தொடங்கினார். இன்று, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கு உரிமையாளர்.

64 வயதாகும் சேத்தி, இன்றும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். லிங்க்டு இன் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் 34 வயதான நேஹா நர்கடே. 360 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள நேஹா, இந்தப் பட்டியலில் 60-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த இந்திய வம்சாவளிப் பெண்கள் ஒவ்வொருவரும் கடும் சோதனை களைத் தாண்டியே இந்த இடத்துக்கு வந்துள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

வாழ்த்துகள் அம்மணீஸ்!

நிலவுக்கு விண்கலம் செலுத்தும் இந்தியப் பெண் விஞ்ஞானிகள்!

நிலவுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவவிருக்கிறது இந்தியா. சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றுபவர்களில் 30 சதவிகிதம் பேர் பெண்கள். மிஷன் இயக்குநராக ரிது கரிதலும், திட்ட இயக்குநராக வனிதா முத்தையாவும் செயலாற்றி வருகின்றனர். இப்படி, திட்ட இயக்குநர், மிஷன் இயக்குநர் என்று ஒட்டுமொத்த திட்டத்துக்கும் பெண்கள் தலைமைதாங்குவது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

கார்ட்டோசாட்-1, ஓஷன்சாட்-2 போன்ற ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் திட்டங்களில் திறம்படப் பணியாற்றியவர் வனிதா. இந்திய வானியல் சங்கம், சிறந்த பெண் விஞ்ஞானி விருதை 2006-ம் ஆண்டு, வனிதாவுக்கு வழங்கியிருக்கிறது. ஏரோஸ்பேஸ் பொறியாளரான ரிது கரிதல், மங்கள்யான் திட்டத்தில் பணியாற்றியவர். 2007-ம் ஆண்டு இஸ்ரோ இளம் இயக்குநர் விருதை டாக்டர் அப்துல் கலாமிடம் பெற்றவர். நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை உலகுக்கு முதன்முதலில் உரத்துச்சொன்ன சந்திரயான்-1 மிஷன் பெருவெற்றி அடைந்தது போல, சந்திரயான்-2 திட்டமும் வெற்றி அடையும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ``இந்தப் பணிகளுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறவர்களைத்தான் நாங்கள் தேடினோம். அதற்கு ஏற்றவாறு பெண்கள் அமைந்தனர். அவ்வளவு தான்'' என்று சொல்கிறார், இஸ்ரோ தலைவர் சிவன்.

நிலவையும் தொடும் பெண்கள்!

ஆசிஃபாவின் வழக்கறிஞருக்கு `ஆண்டின் சிறந்த பெண்' விருது!

டந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா நகரில் எட்டு வயது சிறுமி ஆசிஃபா, கொடூரமான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அதிர்வலைகளை எழுப்பியது. ஆசிஃபா கொலையில் குற்றவாளிகளைத் தப்பவைக்க வலதுசாரிக் கட்சிகள் சார்பில் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், பாதிக்கப்பட்ட ஆசிஃபாவின் சார்பில் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதிட்டார் வழக்கறிஞர் தீபிகா ரஜாவத். இதனால், வலதுசாரிக் கட்சிகள் விடுத்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல்களையும் சமாளித்தார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பதான்கோட் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு காரணங்கள் காட்டி வழக்கு மாற்றப்பட்ட பிறகு, `தன் மகளை கவனித்துக் கொண்டு பதான்கோட் சென்றுவர முடியவில்லை' என்று தீபிகா தெரிவித்ததால், ஆசிஃபா குடும்பத்தினர் வேறு வழக்கறிஞர் துணையுடன் வழக்கை நடத்தினர். சமீபத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, அவர்களுக்குத் தண்டனையும் வழங்கியது நீதிமன்றம். தொடர்ந்து இந்த வழக்கில் ஆர்வம் செலுத்திப் போராடியதற்காக, இந்திய மெர்ச்சன்ட் சேம்பர் ஆஃப் காமர்ஸின் பெண்கள் பிரிவு, தீபிகாவுக்கு `வுமன் ஆஃப் தி இயர்' விருது வழங்கி கௌரவித்துள்ளது. ``நாட்டில் பாலியல் வன்புணர்வுச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் எனக்குக் கிடைக்கும் உயர்ந்த விருதாக இருக்கும்'' என்று கூறியுள்ளார் தீபிகா.

விரைவில் அந்த விருதும் கிடைக்கட்டும்!

கால்களால் தேர்வெழுதி மதிப்பெண் அள்ளிய மாற்றுத்திறனாளி!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தேவிகா, சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ (90% மேல்) மதிப்பெண் பெற்றுள்ளார். மலப்புரத்தின் தென்னிப்பாலம் காவல்நிலைய உயரதிகாரியான சஜீவின் மகளான தேவிகா செய்தது ஒரு சாதனையே அல்ல. எப்போதும் போலத்தான் அவர் படிக்கிறார் என்று சொல்கிறது அந்தக் குடும்பம். பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான தேவிகாவை உற்சாகப்படுத்தி, அவர் கால்களில் பென்சிலைத் தந்து எழுதவைத்தார், அவரின் தாய் சுஜிதா. பள்ளியின் ஆசிரியர்கள் கைகொடுக்க, கால்களைக்கொண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

மலையாளம், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் அருமையாக எழுதக்கூடியவர் தேவிகா. வள்ளிக்குன்னுவில் உள்ள சந்தன் பிரதர்ஸ் பள்ளியில் 11-ம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் தேவிகா, ஹியூமானிட்டீஸ் பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவிகாவின் குடும்பத்தை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார், கேரள மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா.

தடையை உடைத்த சுட்டிப் பெண்!

மாதவிலக்கைக் கொண்டாடும் மகா விழா!

ஜூன் மாதம் 15-ம் தேதி முதல், மூன்று நாள்களுக்கு ஒடிசா மாநில மக்கள் `ராஜ பர்பா' விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். புராணக் கதைகளின்படி, இந்த மூன்று நாள்களும் பூரி ஜகந்நாதரின் மனைவியான பூமாதேவி மாதவிலக்கைக் கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது. நான்காம் நாள் காலை தலைக்குளியலும் நடைபெறுகிறது. ஒடிசாவில் விவசாயப் பணிகள் தொடங்கும் காலத்தையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கிறது. `பஹிலி ரஜோ' என்ற பெயரில் முதல் நாள் ஆரம்பமாகிறது. `மிதுன சங்கராந்தி' என்ற இரண்டாவது நாளில் மிதுன மாதம் (மழைக்காலத் தொடக்கம்) பிறக்கிறது. மூன்றாவது நாள் `பூதாகா', நான்காம் நாள் `வசுமதி ஸ்நானம்' என்று ஒவ்வொரு நாளும் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த விழாவின்போது, பெரும்பாலும் பெண்களுக்கு மூன்று நாள்கள் கட்டாய ஓய்வு தரப்படுகிறது. சமைக்கும் வேலை இல்லை. முதல் நாள் அதிகாலையே எழுந்து குளித்துவிட்டால், அடுத்த குளியல் நான்காம் நாள்தான். சில இடங்களில், பெண்கள் சமைக்காத உணவை மட்டுமே உண்ணும் வழக்கமும் உண்டு. புத்தாடைகள் வாங்க, விளையாட, இனிப்புகள் சுவைக்க என்று பெண்களுக்கு இந்தத் திருவிழா நாள்களில் தனி கவனிப்புதான்!

மரங்களில் கட்டப்படும் விதவிதமான ஊஞ்சல்கள்தாம் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம். ராம் டோலி, சர்க்கி டோலி, படா டோலி, தண்டி டோலி என்று பலவிதமான ஊஞ்சல்கள் கட்டி பெண்கள் ஆடுவதுண்டு. அரிசி, உளுந்து, திராட்சையில் செய்யப்படும் `பொடா பிதா' என்ற பூரி ஜகந்நாதருக்குப் பிடித்த இனிப்பு வகையும் வீடுகளில் பெண்களுக்குத் தரப்படுகிறது. பழங்குடியினரின் வளமைத் திருவிழாவான ராஜ பர்பா, இப்போது அனைத்து தரப்பினராலும் பூரி, பாலாசூர், கட்டாக் போன்ற பெருநகரங்களிலும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் ராஜ பர்பா வாழ்த்துகள்!

-நிவேதிதா லூயிஸ்

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

19 வயது மிருதுளா மற்றும் 21 வயது தியா ஆகிய இரு மூன்றாம் பாலினர் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர இருக்கின்றனர். மூன்றாம் பாலினர் குறித்த புரிதலை மேம்படுத்தும் விதத்தில் இதுவரை ஆறு பேர், இந்தப்படிப்பை லயோலாவில் முடித்திருப்பதாகக் கல்லூரி தெரிவித்திருக்கிறது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ந்திய ரயில்வேயில் லோக்கோ பைலட்டுகள், ஃபிட்டர்கள், வெல்டர்கள் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதில், இந்தியா முழுக்க 4.75 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். லோக்கோ பைலட் என்ற இன்ஜின் ஓட்டுநர் பணிக்கு மட்டும் தமிழகத்திலிருந்து 39,139 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த மாணவி உதய கீர்த்திகா, இஸ்ரோ கட்டுரைப் போட்டியில் வெல்ல, அது தந்த ஆர்வத்தால் விண்வெளிப் படிப்பை உக்ரைன் நாட்டில் தொடர்ந்தார். சர்வதேச அளவில் விண்வெளி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளைஞர்களில் உதயாவும் ஒருவர். போலந்து நாட்டின் 'அனலாக் விண்வெளிப் பயிற்சி மைய'த்தில் இப்போது பயிற்சிபெற்றுவருகிறார் உதயா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

கேரளாவின் ஆலப்புழை நகராட்சி, அந்த ஊரைச் சேர்ந்த 5,000 பெண்களுக்கு மென்ஸ்ட்ருவல் கப்களை இலவசமாக வழங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு `திங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு, கேரள வெள்ளத்தின்போது கேம்ப்புகளில் தங்கியிருந்த பெண்கள் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தும்போது ஏற்பட்ட சுகாதாரக்கேடுகளை கவனத்தில்கொண்டே இத்திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கோகுல் ஸ்ரீதர், தன் முகநூல் பக்கத்தில் மறுமணம் செய்துகொண்ட தன் அம்மா குறித்து எழுதிய பதிவு வைரலானது. கணவரிடம் அடி வாங்கி ரத்தம் வந்த நிலையில்கூட அதை மகனுக்காகத் தாங்கிக்கொண்டதாக தன் தாய் சொன்னதை நினைவுகூர்ந்த மகன், ஒரு கட்டத்தில் சித்ரவதை தாங்காமல் மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு தாய் வெளியேறியதை எழுதியுள்ளார். எப்படியாவது தாய்க்கு மறுமணம் செய்துவைக்க விரும்பிய கோகுல், தெரிந்தவர்கள் மூலம் மாப்பிள்ளை பார்த்து அம்மாவுக்கு மறுமணமும் செய்துவைத்துவிட்டார். மகிழ்ச்சியாக அதைப் பகிரவும் செய்தார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ண் பெண் பாலின சமத்துவத்தைக் குலைக்கும் விளம்பரங்களை இங்கிலாந்து நாட்டின் விளம்பரங்களைக் கண்காணிக்கும் `அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி' அமைப்பு 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தடை செய்தது. ஆறு மாத அவகாசம் தந்து, அதுபோன்ற விளம்பரங்களை மாற்ற உத்தரவிட்டது. இனி, ஆண்கள் டயப்பர் மாற்றத்திணறுவது போல, பெண்கள் பார்க்கிங் செய்யத் தவிப்பது போன்ற விளம்பரங்கள் அங்கு வரப்போவதில்லை.

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ரசின் ஆதார் திட்டம் குறித்து தொடர்ச்சியாக எழுதியும், அதன் குறைகள் பற்றிப் பேசியும் வந்த சமூக ஆர்வலர் உஷா ராமநாதனுக்கு ஐ.நா சபை 2018-ம் ஆண்டுக்கான மனித உரிமை ஹீரோ விருது கொடுத்து கௌரவித்துள்ளது. ஆதாரைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், அதன் குறைகளை மக்களிடம் எடுத்துச்சென்றவர் உஷா. இவரோடு, பொதுமக்களின் உரிமையைக் காக்க போராடிய அனைவரையும் ஐ.நா நினைவுகூர்ந்திருக்கிறது.